குடும்பங்களில் அக்காமார்களின் பெருமையைப் பற்றி ‘தம்பி’ திரைப்படம் பேசும்..!

குடும்பங்களில் அக்காமார்களின் பெருமையைப் பற்றி ‘தம்பி’ திரைப்படம் பேசும்..!

வயாகம்18 ஸ்டுடியோஸ் & பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தம்பி.’

இந்தப் படத்தில் ஜோதிகா அக்காவாகவும், தம்பியாக கார்த்தியும் நடித்துள்ளது சிறப்பு மிகுந்தது. இது போக கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். கார்த்தி-ஜோதிகாவின் அப்பா, அம்மாவாக சத்யராஜூம், சீதாவும் நடித்துள்ளார்கள். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடனம் – ஷோபி, பிரசன்னா சுஜித், சண்டை இயக்கம் – சில்வா, பாடல்கள் – விவேக், கார்த்திக் நேத்தா, கலை இயக்கம் – பிரேம் நவாஸ், படத் தொகுப்பு – வி.எஸ்.விநாயக், வசனம் – கே.மணிகண்டன், இசை – கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், தயாரிப்பு – சூரஜ் சாதனா, வயாகம்18 ஸ்டுடியோஸ்.

த்ரில்லர், காமெடி, ஃபேமிலி, ஆக்‌ஷன் என எல்லா ஜானர்களிலும் படங்களை இயக்கி வெற்றி பெற்ற மலையாள இயக்குநரான ஜீத்து ஜோசப், நேரடி தமிழ்ப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தத் ‘தம்பி’ படத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

thambi-movie-poster-1

படத்தில் நடித்திருக்கும் ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகிய நால்வரையும் படம் பற்றி பேச ஒன்றாக சந்திக்க வைத்திருந்தனர்.

அவர்களின் உரையாடலில் இருந்து சில முக்கிய பகுதிகள் :

சூர்யா, கார்த்தி இருவரும் எப்போது சேர்ந்து நடிப்பாங்கன்னு எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க… ஆனால் ஜோதிகா-கார்த்தி ரெண்டு பேரையும் சேர்த்து நடிக்க வைச்சது ஏன்…?

ஜீத்து ஜோசப் : இவங்க ரெண்டு பேரையும் நான் செலக்ட் பண்ணல. படம் எங்கிட்ட வந்தப்போ இவங்க ரெண்டு பேரும் பிக்ஸ் ஆகிருந்தாங்க. இந்தக் காம்பினேஷன் எனக்கும் பிடிச்சிருந்தது. அதுக்கு அப்புறமா மற்ற நடிகர்களைத்தான் நான் செலக்ட் பண்ணினேன்.

இந்தக் கதை எப்படி உருவானது..?

ஜீத்து ஜோசப் : இந்தக் கதையை பாலிவுட் எழுத்தாளர்களான ரென்ஷில் டி சில்வா, சமீர் அரோரா ரெண்டு பேரும் எழுதியிருக்காங்க. அவங்க கதையை நான் கொஞ்சம் மாத்தி வேலை பார்த்திருக்கேன். அவங்க ஹிந்தி, நான் மலையாளம்.. அதனால தமிழ்ல சரியா இருக்கனும்கிறதுக்காக விக்ரம் வேதா ரைட்டர் மணிகண்டன் இதில வேலை பார்த்திருக்கார். இந்தப் படத்தின் திரைக்கதையில் 4, 5 பேர் வேலை பார்த்திருக்கோம்.

thambi-movie-poster-3

ஜீத்து சார், நீங்களே ஒரு திரைக்கதை மாஸ்டர்தான்.. இன்னொருவரின்  திரைக்கதையை வாங்கி செய்தது எப்படி இருந்தது..?

ஜீத்து ஜோசப் : நான் திரைக்கதையில் மாஸ்டர் எல்லாம் கிடையாது. மத்தவங்க திரைக்கதைய பண்றதுல சாதகமும் இருக்கு; பாதகமும் இருக்கு. என்னோட கதையில என்னோட பார்வை மட்டுமேதான் இருக்கும். முடிவு என் கையில் இருக்கும். மத்தவங்க திரைக்கதையில் அவங்களோட பார்வை இருக்கும். அதை நாம் சரியா பண்ணணும்.

இந்தக் கதையில நாலு மூளைகள் வேலை செஞ்சிருக்கு. ஆனால் இறுதியா படம் நல்லா வரணும்.. அதை நோக்கித்தான் எல்லாரும் வேலை பார்த்திருக்கோம். எங்கள் யார்கிட்டயும் ஈகோ இல்ல.

‘தம்பி’ன்னு ஏற்கனவே ஒரு படம் வந்துருக்கு. அப்புறம் ஏன் மீண்டும் அதே டைட்டில்..?

ஜீத்து ஜோசப் : நிறைய தலைப்புகளை யோசிச்சிருந்தோம். ஆனால் இந்தக் கதைக்கு இதுதான் சரியா இருந்தது. இந்தப் படமே அக்கா தம்பி கதைதான். அதுனால இந்தத் தலைப்புதான் சரின்னு தோணுச்சு.

கார்த்தி : நிறைய டைட்டில் யோசிச்சோம்.. கிடைக்கல. ஏற்கனவே புக் பண்ணி வச்சுட்டாங்க. கெஞ்சி கூடப் பார்த்தோம். ஆனால் கிடைக்கல. அப்புறம் இந்த டைட்டில் சரியா இருக்கும்னு டைரக்டர் சொன்னார். அப்புறம் எனக்குள்ள இருக்கிற ஒரு உதவி இயக்குநரா யோசிச்சு, இதுதான் சரியான தலைப்பா இருக்கும்ன்னு நினைச்சு இதையே வைச்சிட்டோம்.

Thambi-Movie-Stills-4

கதை பற்றி கொஞ்சமா சொல்லுங்களேன்..?

ஜீத்து ஜோசப் : இது ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படம். அதே சமயம் திரில்லரும் இருக்கு. இரண்டு குடும்பங்கள். அவங்களுக்குள்ள நடக்கிற சம்பவங்கள்.. அதில் ஒரு திரில்லர் இருக்கும். இதுக்கு மேல இப்ப எதுவும் சொல்ல முடியாது.

படத்துல உங்க கேரக்டர்ஸ் மற்றும் எல்லோரட கேரக்டர்ஸ் பத்தியும் சொல்லுங்களேன்..?

ஜோதிகா : நாங்க எல்லோரும் ஒரே குடும்பம். நான் ஒரு இளமையான அக்கா. அவ்வளவுதான் சொல்லுவேன்.

கார்த்தி : இது ஒரு குடும்பத்துக்குள்ள நடக்கிற கதை அவ்வளவுதான்.

கார்த்தி,  ஜோதிகா படங்கள் பார்த்திருக்கீங்களா..? உங்களுக்கு பிடிச்ச படங்கள்..?

ஜீத்து ஜோசப் : கார்த்தியோட முதல் படம் ‘பருத்தி வீரன்’ பார்த்திருக்கேன். அதுலயே கலக்கியிருப்பார். அப்புறம் ‘தீரன்’.. இப்ப ‘கைதி’ ரொம்ப பிடிச்சது. ஜோதிகாவை ‘மொழி’ல ரொம்பப் பிடிக்கும். அவங்க என்ன பண்ணாலும் சரியா இருக்கும். அது பிடிக்கும். அவர் நடிக்கும் எல்லாப் படங்களையும் பார்ப்பேன்.

Thambi-Movie-Stills-2

இந்தப் படத்தில் வேற, வேற லுக்ல வர்றீங்களா…? எத்தனை கேரக்டர் உங்களுக்கு…?

கார்த்தி : மல்டிபிள் லுக் கிடையாது . ரெண்டே லுக்குதான். கதை கோவாவுல ஆரம்பிச்சு பயணிக்குது. அதனால் ரெண்டு லுக். ஆனால், ஒரே கேரக்டர்தான். நான் நிறைய கெட்டப் முயற்சி பண்ணினதில்லை. ஜீத்து சார்தான் தைரியம் சொல்லி கோவா லுக் பண்ண வச்சார்.

‘உங்கள சும்மாவே பாக்குறாங்க.. வேற லுக்லயும் பார்ப்பாங்க’ன்னு கன்வின்ஸ் பண்ணாரு. நான் ஒரு லுக்ல சுத்திட்டு இருக்கேன்.. இல்லையா… அந்த லுக்ல கோவால நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க. சார் பைக்ல கூட்டிப் போய் ‘பாருங்க… எவ்வளவு பேர் உங்கள மாதிரி சுத்திட்டு இருக்காங்க’ன்னு காட்டினார். கோவா பகுதிக்கு மட்டும் அதை முயற்சி பண்ணிருக்கோம். அப்புறம் நார்மல் மோடுக்கு மாறிருவேன்.

நிகிலா… இவங்க ரெண்டு பேர் நடிக்கிற படம் எப்படி ஒத்துக்கிட்டீங்க..?

நிகிலா விமல் : இந்த டீமே ரொம்பப் பெரிசு. பெரிய, பெரிய டெக்னீஷியன்கள். இவங்க ரெண்டு பேரும் நடிக்கிறாங்க. இப்படி ஒரு படத்தை யார் வேணாம்ன்னு சொல்வாங்க..?

ஆனால் எனக்கு முதல்ல ஒரு பயம் இருந்தது. தமிழில் எனக்கு ரீ என்ட்ரி மாதிரி நம்ம கேரக்டருக்கு ஒண்ணும் இருக்காதோன்னு நினைச்சேன். ஆனால் கதையைக் கேட்டபோது என் கேரக்டர் நல்லா இருந்தது.. அதனால்தான் ஒத்துக்கிட்டேன்.

Thambi-Movie-Stills-5

உங்க ரியல் லைஃப் ரிலேஷன்ஷிப் இந்தப் படத்துக்கு உதவியா இருந்ததா…?

ஜோதிகா : கண்டிப்பா ரொம்ப ஈஸியா இருந்தது. கேஷிவலா நடிச்சோம்.

கார்த்தி : ரொம்ப நாளா நடிக்கிறது  உதவியா இருந்தது. கேமரா ஆன் பண்ணிட்டா கேரக்டருக்குள்ள போயிடறது. அது பழக்கத்துல வருவதுதான்.

ஜோதிகா : ரெண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் டேக்லயே முடிக்கிறது பிடிக்கும். இதனஆல் எல்லாமே ரொம்பவும் ஈஸியா இருந்தது.

படத்தில் ரெண்டு பேருக்கும் சரி சமமான இடம் இருக்கா ?

கார்த்தி : கண்டிப்பா இருக்கு. இந்தக் கதையே அப்படித்தான். எங்க ரெண்டு கேரக்டருக்கும் தனித் தனி பார்வை இருக்கு. ஸ்பேஸ் இருக்கு.. ரெண்டும் முட்டிக்கும்.. அது சேரும்போது அழகா இருக்கும்.

ஜோதிகா : எனக்கு அக்கா கேரக்டர் இதுவரை பண்ணினதில்ல, அம்மா ஓகே.. இது ரொம்ப புதுசு.. நல்லா இருந்தது.

உங்க லுக் இந்தப் படத்தில் எப்படி வந்திருக்கு…?

ஜோதிகா : நான் இந்தப் படத்தில் கார்த்தியை விடவும் யங்கா தெரியணும்ன்னு  பண்ணிருக்கேன். அதுதான் என் லுக்.

கார்த்தி : R.D.ராஜசேகர் சார் அண்ணியோட ஃபேவரைட்.  அவர் பண்ணின படங்கள்ல அண்ணி ரொம்ப அழகா தெரிவாங்க, படமும் பெரிய ஹிட்.  எனக்குல்லாம் குளோசப் ஷாட் ஒரு நிமிஷத்துல முடிஞ்சுடும். அண்ணிக்கு அரை மணி நேரம் எடுப்பார். எனக்கெல்லாம் இந்த மாதிரி பண்ணவே இல்லையேன்னு சொல்லுவேன்.

Thambi-Movie-Stills-7

தமிழ் சினிமால நிறைய அக்கா தம்பி வந்துருக்காங்க. இவங்ககிட்ட என்ன ஸ்பெஷல்..?

ஜீத்து ஜோசப் : இதுல எல்லா கேரக்டருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஒரு நோக்கம் இருக்கும்.

கார்த்தி : கண்டிப்பா ஒரு ஸ்பெஷல் இருக்கு. ஆனால், அதை நீங்க தியேட்டர்ல படம் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்.

ஜோதிகா : இதுல நிறைய ஒரிஜினாலிடி இருக்கும்.

நிறைய அக்கா தம்பி கதைகள் வந்திருச்சே.. இந்தப் படம் என்ன சொல்லுது..?

கார்த்தி : டயலாக் எழுதின பாரதி தம்பி சொல்லியிருந்தார். அவரோட அக்கா பேர் பாரதி. அக்கா மேல இருந்த பாசத்துல தன்னோட பேர ‘பாரதி தம்பி’ன்னு மாத்தி வச்சிக்கிட்டதா சொன்னார். ‘அக்காங்கிறது இன்னொரு அம்மா’ன்னு டயலாக் எழுதியிருந்தார். அதுதான் உண்மை. குடும்பங்களில் ‘அக்கா’ என்ற உறவு எவ்வளவு பலமானதுன்னு இந்தப் படம் பேசும்.

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கும்போது எது கஷ்டமா இருந்தது…?

கார்த்தி : கஷ்டமெல்லாம் தோணவே இல்ல. நாங்க எப்பவும் எப்படி இருப்போமோ அப்படிதான் இருந்தது. நான் என்ன ரசிச்சேன்னா படத்துல எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. சண்டை போட்டுகிட்டே இருப்போம்.. அவங்க முறைப்பாங்க.. நான் ஒதுங்கி போவேன்.. அதை ரசிச்சேன்.

வீட்லயும் அப்படித்தானா..?

கார்த்தி : ம்ம்.. வீட்லயும் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசிப்போம்.

ஜோதிகா : இல்ல வீட்ல நாங்க சண்டைலாம் போட்டுக்க மாட்டோம்.

Thambi-Movie-Stills-3

உங்க தம்பி தயாரிக்கிற படம்.. இன்னொரு பக்கம் இந்தத் தம்பி கூடவும் நடிச்சிருக்கீங்க.. அந்த அனுபவம் எப்படி இருந்தது…?

ஜோதிகா : எதிர்பார்க்கவே இல்ல. எப்படி நடந்ததுன்னு இப்ப யோசித்தாலும் ஆச்சரியமா இருக்கு. அதுவும் ரெண்டு பக்கமும் பொருந்துவது போல ‘தம்பி’ன்னு டைட்டில் அமைஞ்சது.. எல்லாமே ரொம்ப சந்தோஷமான விஷயங்கள்.

கார்த்திகூட நடிக்கிறது கஷ்டமா?  இல்ல சூர்யா கூட நடிக்கிறது கஷ்டமா..?

ஜோதிகா : சூர்யா கூடத்தான். அவர்கூட நடிக்கிறது கஷ்டம்.. நிறைய சண்டை வரும்.

எப்படியான சண்டை..?

ஜோதிகா : உங்க வீட்ல எப்படி சண்டை வருமோ.. அப்படித்தான் புருஷன் பொண்டாட்டி சண்டை.

கார்த்தி : அண்ணாகிட்ட நேத்து சொன்னேன்,, நீ பாட்டுக்கு ஆடியோ லாஞ்ச்ல ‘எனக்கு கிளிசரின் போடாம அழுக வராது.. இவங்க ஈஸியா பண்ணுவாங்கனு பேசிட்டு போயிட்ட.. எங்க ரெண்டு பேரையும் அழு மூஞ்சினு சொல்லப் போறங்க’ன்னு சொன்னேன்.

ஜோதிகா : அதுவும் ஒரு திறமைதான். கிளிசரின் போடாம அழுகுறது ஈஸியான விஷயம் கிடையாது இல்லையா..?

கார்த்தி : என்னைப் பொறுத்தவரைக்கும் கதைதான் எல்லாத்துக்கும் காரணம். இது எல்லாமே கதை தீர்மானிக்கிற விஷயம்னு நம்புறேன். எல்லாப் படத்துலேயும் வரும்னு சொல்ல முடியாது. கதை சரியா இருக்கணும். எமோஷனும் இருக்கணும். அப்பதான் அது ஒர்க் அவுட் ஆகும்.

தமிழ் சினிமால ஜோதிகாவ ‘பொம்பள கமல்’ன்னு சொல்வாங்க. இதுல எப்படி நடிச்சிருக்கீங்க..?

ஜோதிகா : அப்படில்லாம் ஒண்ணும்  கிடையாது. அப்படி யாரும் சொல்லவும் மாட்டாங்க. என்ன பொறுத்தவரைக்கும் லேடி கமல்னா அது ஒரே ஆள்… ஊர்வசி மேடம் மட்டும்தான்.

ஜீத்து ஜோசப் : ஒண்ணு சொல்லணும்.  இவங்க நடிப்பு பிரமாதம். ஒரு கேரக்டருக்கு இவங்க எடுத்துக்குற உழைப்பு, சிரத்தை, ஒரு ஸீனுக்கு முன்னாடி அவங்க தன்னை தயார்படுத்திக்கிறது எல்லாமே பக்கா ஃபுரபஷனல்.

ஜோதிகா : நன்றி சார்.

Thambi-Movie-Stills-8

ஜீத்து ஜோசப் படத்துல நடிக்கிறதுக்கான ஸ்கோப் அதிகமா இருக்கும் இதுல எப்படி இருந்தது..?

கார்த்தி : என்னை பொறுத்தவரைக்கும் சார் சுதந்திரமா விட்டுடுவாரு. அவங்கங்க பெஸ்ட் எதுவோ.. அத பண்ண விடுவாரு. அதே நேரம் ஸீனுக்கு என்ன வேணுமோ அத எடுத்துடுவாரு.

ஜோதிகா : எனக்கு பிடிச்ச விசயம்.. சார் எல்லாத்துக்கும் லாஜிக் பார்ப்பாரு. ஒரு ஸீன் அந்த லாஜிக்கோட இருக்கா ஆடியன்ஸ் பாயிண்ட்ல எப்படி எடுத்துப்பாங்கனு பார்ப்பாரு. இப்ப யாரும் அதைப் பாக்கிறதில்ல. அது எனக்கு பிடிக்கும்.

நிகிலா விமல் : டைரக்டர் எப்பவும் பர்ஃபெக்ட் 99-லேயே நிக்கவிட  மாட்டார். 101-க்கும் போகவிட மாட்டார். சரியா 100-ல அவருக்கு தேவையானத வாங்கிடுவார்.

அப்பாவியான எக்ஸ்பிரஷன்ஸ் ஜோதிகா பயங்கரமா இருப்பாங்க.. இந்தப் படத்துல அப்படி இல்லையே..?

ஜீத்து ஜோசப் : ஜோ மேடத்துகிட்ட டெட்லி லுக் ஒண்ணு இருக்கு. அது இந்தப் படத்தில் நல்லா வந்திருக்கு.

Thambi-Movie-Stills-6

உங்க தம்பிதான் இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்காரு. ஷீட்டிங்கில் ஏதாவது சுவாரஸ்யம் நடந்ததா..?

ஜோதிகா : நான் சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டேன். என் தம்பி அப்ப ரொம்ப சின்ன பையன். அப்புறம் நான் சென்னையில செட்டில் ஆகிட்டேன். போன்லதான் பேசிப்போம். இந்தப் படத்தோட ஷூட்டிங் சமயத்துலதான் நான் அவன்கூட அதிகமா கூட  இருந்துருக்கேன்.

அம்மா வந்தப்பவும் அது நிஜமா நடந்தது. அவங்கள்ட்ட எப்பவும் போல ஏதாவது சாப்பிடுங்கன்னு சொன்னேன். ‘நான் ஹீரோயினோட அம்மாவா வரலை.. தயாரிப்பாளரோட அம்மாவாத்தான் வந்திருக்கேன். என்ன நல்லா கவனிச்சுக்கிட்டாங்க’ன்னு ரொம்ப பெருமையா சொன்னாங்க. எனக்கு ரொம்பவம் சந்தோஷமா இருந்தது.

Thambi-Movie-Stills-1

சத்யராஜ், சௌகார் ஜானகியம்மால்லாம் பயங்கரமா நடிக்கக் கூடியவங்க. கூட நடிக்கும்போது பயமா இருந்ததா..?

கார்த்தி :  சத்யராஜ் சார் ரோலோ, சௌகார் மேடம் ரோலோ என்னால நடிக்க முடியாது. நான் என்னோட ரோல்தான் பண்ண முடியும். அதை சரியா பண்ணினால் போதும்னு நினைக்கிறேன். அப்புறம் இதுல எல்லாருக்குமே அற்புதமான கதாப்பாத்திரம். அவங்களுக்கான ஸ்பேஸ் இருந்தது. ஒரு படத்தில எல்லாரும் இணைஞ்சு நல்லா நடித்தால்தான் படம் நல்லா வரும். படம் முடிஞ்சு போகும்போது அந்தக் கேரக்டர் நல்லா இருந்தது.. இந்தக் கேரக்டர் நல்லா இருந்தது அப்படின்னு பேசினால்தான் படம் ஜெயிக்கும். நான் அதைதான் நம்புறேன்.

சௌகார் ஜானகி மேடம் ரொம்பவும் அனுபவம் வாய்ந்த நடிகை. அவங்களோட நடிச்சது எப்படி இருந்தது..?

ஜோதிகா : ஒரு மிகப் பெரிய அனுபவம். அவங்களுக்கு எத்தனை வருட அனுபவம் அவங்களோட சேர்ந்து இருந்தாலே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அவங்க ஹோட்டலுக்கே போக மாட்டாங்க. ஸ்பாட்லயேதான் இருப்பாங்க, இப்பவும் தொழில் மேல அவங்க காட்டற பக்தி பெரிது. முதல் நாள் ஜீன்ஸ் டீசர்ட்ல வந்தாங்க. யூனிட்ல இருக்குற எல்லோர்கூடவும் நல்லாப் பழகுவாங்க. அவங்களுக்கு ஸ்வீட் வாங்கி கொடுத்தாங்க. எல்லாத்துக்கும் சமைச்சு போட்டாங்க.

கார்த்தி : 88 வயசில லைஃப் என்ஜாய் பண்றாங்க செளகார் அம்மா. துறுதுறுன்னு இருக்காங்க. படிக்கட்டுல விழுகுற மாதிரி ஒரு ஸீன்ல நாங்க எதிர்பாக்கவே இல்ல. டக்குனு விழுந்து எந்திரிச்சுட்டாங்க. நாங்கதான் பயந்துட்டோம்.

ஜீத்து ஜோசப் : ஆமா நாங்க டூப் போட்டுக்கலாம்னு சொன்னோம். ஆனால் நானே பண்றேன்னாங்க.. ‘விழுந்தால் போதுமா; படிக்கட்டுல உருண்டு வரவா’ன்னு கேட்டாங்க.. பயங்கரமான எனர்ஜி. அசந்துட்டோம்..!

ஒரே படத்தில் சிவக்குமார், ஜோதிகா, கார்த்தி, சூர்யா நடிக்கிற வாய்ப்புகள் இருக்கா..?

ஜீத்து ஜோசப் : நல்ல ஐடியா.. கொஞ்சம் டைம் கொடுங்க.. ரெடி பண்ணிட்டு வந்துடுறேன்…

இசை எப்படி வந்திருக்கு..?

ஜீத்து ஜோசப் : இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா ரொம்பத் திறமையானவர். அவர் பண்ணியிருக்கும் படங்கள் பார்த்தாலே தெரியும்.  ‘96’ எல்லாம் சூப்பரா பண்ணிருக்கார். இந்தப் படத்தில் மூன்று பாடல்களை அழகா உருவாக்கியிருக்கார். பின்னணி இசை எப்படி வந்திருக்குன்னு பார்க்க.. நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்..!




error: Content is protected !!