அக்காவாக ஜோதிகாவும், தம்பியாக கார்த்தியும் நடிக்கும் ‘தம்பி’ திரைப்படம்

அக்காவாக ஜோதிகாவும், தம்பியாக கார்த்தியும் நடிக்கும் ‘தம்பி’ திரைப்படம்

வயாகம்18 ஸ்டுடியோஸ் & பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ‘தம்பி’

இந்தப் படத்தில் ஜோதிகா அக்காவாகவும், தம்பியாக கார்த்தியும் நடித்துள்ளது சிறப்பு மிகுந்தது. இது போக கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். அப்பா, அம்மாவாக சத்யராஜூம், சீதாவும் நடித்துள்ளார்கள். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

நடனம் – ஷோபி, பிரசன்னா சுஜித், சண்டை இயக்கம் – சில்வா, பாடல்கள் – விவேக், கார்த்திக் நேத்தா, கலை இயக்கம் – பிரேம் நவாஸ், படத் தொகுப்பு – வி.எஸ்.விநாயக், வசனம் – கே.மணிகண்டன், இசை – கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், தயாரிப்பு – சூரஜ் சாதனா, வயாகம்18 ஸ்டுடியோஸ்.

த்ரில்லர், காமெடி, ஃபேமிலி, ஆக்‌ஷன் என எல்லா ஜானர்களிலும் படங்களை இயக்கி வெற்றி பெற்ற மலையாள இயக்குநரான ஜீத்து ஜோசப், நேரடி தமிழ்ப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

‘பாபநாசம்’ மாதிரியே இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதைதான். நகைச்சுவை, ஆக்‌ஷன்ஸ், எமோஷன்ஸ், திரில்லிங் மொமண்ட்ஸ் எல்லாமே இந்த ‘தம்பி’யில் அமைந்துள்ளது.

சென்னை மற்றும் மேட்டுபாளையத்தில் 17 நாட்களும், கோவாவில் 50 நாட்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

வருகிற நவம்பர் 30-ம் தேதி இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. டிசம்பர் 20-ம் தேதி படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.




error: Content is protected !!