பாலிவுட்டில் தமன்னா-பிபாசா பாசு மோதல்..!

பாலிவுட்டில் தமன்னா-பிபாசா பாசு மோதல்..!

கடந்த மாதமே அரசல்புரசலாக வெளிப்பட்ட விஷயம் நேற்றைய முன் தினம் வெட்ட வெளிச்சமானது..

சயீத் அலிகான், ரித்தேஷ் தேஷ்முக், பிபாஷா பாசு, தமன்னா ஆகியோர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் Humshakals.

இத்திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்றைய முன்தினம் மும்பையில் நடந்தது. இதில் படத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களெல்லாம் கலந்து கொண்டார்கள். வராதவர் நடிகை பிபாசா பாசுதான். ஏற்கெனவே இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் தமன்னாவும், பிபாசா பாசுவும் நேருக்கு நேர் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதை மும்பை பத்திரிகைகள் துப்பறிந்து வெளியிட்டிருந்தன.

இப்போது இந்த பிரமோஷனுக்கு பிபாசா வராததற்கான காரணத்தை படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டபோது, அவர் இயக்குநரை கை காட்டியிருக்கிறார். இயக்குநரோ மறுபடியும் தயாரிப்பாளரையே கை காட்டியிருக்கிறார். ஆனால் நிகழ்ச்சியில் பரம சந்தோஷமாக இருந்தது தமன்னாதானாம்..!

உண்மையான காரணம், பிபாசா பாசு நடித்த பல காட்சிகளை எடிட்டிங் கட் செய்து தூக்கியெறிந்துவிட்டார்களாம்.. டப்பிங்கின்போது இதனை அறிந்து கொண்ட பிபாசா கோபம் கொண்டுதான் இந்தப் புறக்கணிப்பை செய்திருக்கிறார் என்கிறார்கள்.

தமன்னாவுக்கும் படத்தின் இயக்குநர் சாஜித்கானுக்கும் நெருக்கமான உறவு இருப்பதினால்தான் தன்னை டம்மியாக்கிவிட்டதாக தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடத்தில் பற்ற வைத்திருக்கிறார் பிபாசா பாசு.

இதனை முற்றிலும் மறுக்கும் தமன்னா, “இயக்குனர் சாஜித்கான் எனக்கு அண்ணன் மாதிரி.. யாரும் தேவையில்லாமல் எங்களை தொடர்புபடுத்தி பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்..” என்று பேட்டியளித்திருக்கிறார்.

ஆக.. தமன்னாவால் பாலிவுட்டும் கொஞ்சம் ஹீட் ஆகியிருக்கிறது..!