பாலாவின் ‘தாரை தப்பட்டை’ ஷூட்டிங் முடிவடைந்தது..!

பாலாவின் ‘தாரை தப்பட்டை’ ஷூட்டிங் முடிவடைந்தது..!

இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் ‘தாரை தப்பட்டை’ படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.

இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக வரலக்ஷ்மி சரத்குமாரும் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து தஞ்சாவூரிலும் மற்றும் அதன் சுற்றுபுர இடங்களிலும் நடைபெற்று வந்தது.

தற்போது இப்படத்தின் படபிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளது. மொத்தமாக 130 நாட்களில் இப்படத்தின் படபிடிப்பை முடித்துள்ளார் இயக்குனர் பாலா.

கடைசி நாட்களில் படத்தின் தயாரிப்பு பாலாவின் கைகளில் இருந்து சசிகுமாரின் கைகளுக்குத் தரப்பட்டு இப்போது தயாரிப்பாளர் சசிகுமார் என்றே சொல்லப்படுகிறது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 1000-மாவது படம் இந்த ‘தாரை தப்பட்டை’ என்பது குறிப்பிடதக்கது.




error: Content is protected !!