சசிகுமாரின் கை முறிந்தது. ‘தாரை தப்பட்டை’ படத்தின் ஷூட்டிங் ரத்தானது..!

சசிகுமாரின் கை முறிந்தது. ‘தாரை தப்பட்டை’ படத்தின் ஷூட்டிங் ரத்தானது..!

இயக்குநர் பாலா எழுதி இயக்கி வரும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடிகர் சசிகுமார் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டைக் காட்சியின்போது விபத்து ஏதும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சையளிக்க மருத்துவர்கள் குழுவும், 2 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தன.

நேற்றைக்கு படமாக்கப்பட்ட சண்டை காட்சியின் தொடர்ச்சி இன்றும் படமாக்கப்பட்டது. இந்த நேரத்தில் திடீரென்று சற்றும் எதிர்பாராதவண்ணம் நடிகர் சசிகுமார் விபத்துக்குள்ளானார். அவரது இடது கை எலும்பு முறிந்துவிட்டது.

உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியோடு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லப்பட்டார் சசிகுமார். அங்கு சிகிச்சைக்கு பின் சசிகுமாரின் இடது கைக்கு மாவு கட்டு போடப்பட்டது. இதனால் சிறிது காலம் ஒய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர் சசிகுமார்.

 மருத்துவர்களும் இதனை வற்புறுத்தியிருப்பதால்  இயக்குநர் பாலா ‘தாரை தப்பட்டை’ படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். நடிகர் சசிகுமார் ஒய்வெடுக்க தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றுள்ளார். ஷூட்டிங் கேன்ஸல் செய்யப்பட்டுள்ளதால் படக் குழுவினர் நாளை சென்னை திரும்புகின்றனர். சசிகுமார் உடல் நலம் முழுமையாக குணமடைந்ததும் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும். 




error: Content is protected !!