தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளையும், செயற்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் தேர்தலை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி இப்போதைய சங்கத்தின் தனி அலுவலருக்கும், தேர்தல் அலுவலருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சந்தா செலுத்தாத உறுப்பினர்கள் சந்தா செலுத்துவதற்கான கால அவகாசம் இந்த ஜூன் 15-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு இந்தத் தகவல் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி சந்தா தொகை செலுத்தியிருக்காத பல உறுப்பினர்கள் இந்தக் காலக்கட்டத்தில் சந்தா தொகையைச் செலுத்திவிட்டார்கள்.

அப்படியிருந்தும் இதுவரையிலும் 51 உறுப்பினர்கள் சந்தா தொகையைச் செலுத்தாதது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உறுப்பினர்கள் வரும் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்றும், அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் சங்கத்தின் தனி அலுவலரும், தேர்தல் அலுவலரும் இணைந்து அறிவித்துள்ளனர்.

இது பற்றிய அறிவிப்பு இன்று மதியம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை இங்கே :