“நயன்தாராவுக்கு தங்கச்சி மாதிரி இருக்கும் ஹீரோயின்..” – இயக்குநரின் புகழாரம்..!

“நயன்தாராவுக்கு தங்கச்சி மாதிரி இருக்கும் ஹீரோயின்..” – இயக்குநரின் புகழாரம்..!

FUNTOON TALKIES PRODUCTION சார்பில் முருகராஜா  தயாரித்திருக்கும் புதிய படம் ‘டீ கடை ராஜா’.

இந்தப் படத்தில் ராஜா சுப்பையா நாயகனாகவும்,   நேகா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு யோகி பாபு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்.  இப்படத்திற்கு இசை – தன்ராஜ் மாணிக்கம், ஒளிப்பதிவு – இளன், படத்தொகுப்பு முத்துராஜ்.

காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி வரும் இத்திரைப்படம், இப்போது இறுதி கட்ட பணிகளில் உள்ளது. 

இத்திரைப்படத்தை பற்றி இயக்குநரும், ஹீரோவுமான ராஜா சுப்பையா பேசும்போது, “இதுவொரு காதல் கலந்த ‘ப்ளாக் காமெடி’ வகையைச் சேர்ந்தது, மிகவும் SIMPLE ஆன ஒரு லவ் ஸ்டோரி-ஐ நேட்டிவிடி மாறாமல் எதார்த்தமாக படமாக்கி உள்ளேன். இப்படத்தில் குறிப்பாக ‘இண்டர்வல் ப்ளாக்’ மற்றும் ‘கிளைமாக்ஸ்’ அதிகம் பேசப்படும்.

படத்தின் கதாநாயகி நேகா கதாபாத்திரத்தோடு மிகவும் ஒன்றி நடித்துள்ளார். அவர் பார்ப்பதற்கு நயன்தாராவின் தங்கை போல் இருந்ததால்தான் இவரை நான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தேன். இவர் தமிழ்த்திரை உலகில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

அதே போல் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு இந்தப் படத்தில் படம் முழுக்க வரும் காமெடியனாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றபடி அனைத்து கதாபத்திரங்களிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர்.

நான் அடுத்த படத்திற்கான கதையையும் தயார் செய்து ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் கூறியபோது அவர் அந்த கதையை படமாக்க ஒப்புக் கொண்டது மட்டுமில்லாமல் இப்படத்தை வாங்கி வெளியிடவும் சம்மதித்துள்ளார். 

பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அந்த நிறுவனமே இதனை அறிவிக்குப் போவதாக கூறியுள்ளது.  தனது முதல் படமே மிகப் பெரிய ஒரு நிறுவனத்தால் கவனிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒரு தருணத்திற்காக தான் பத்து வருடங்களாக சினிமாவில் போராடினேன்.

இனிமேலும் தமிழ் மக்களின் வாழ்வியல் சார்ந்த கதைகளையே படமாக எடுக்க எண்ணியுள்ளேன். மேலும் கொரியன், ஹாலிவுட் படங்களை டிவிடியில்கூட நான் பார்ப்பதில்லை..” என்றார்.




error: Content is protected !!