திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் கடும் போட்டி..!

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் கடும் போட்டி..!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

அந்த வகையில் 2017 – 2019 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் வரும் ஜூலை 30-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் சங்கத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தலா 21 வாக்குகளை அளிக்க வேண்டும்.

  1. தலைவர் பதவிக்கு தலா 1 வாக்கு அளிக்க வேண்டும்.
  2. பொதுச்செயலாளர் பதவிக்கு தலா 1 வாக்கு அளிக்க வேண்டும்.
  3. பொருளாளர் பதவிக்கு தலா 1 வாக்கு அளிக்க வேண்டும்.
  4. துணைத் தலைவர் பதவிக்கு 2 வாக்குகளை அளிக்க வேண்டும்.
  5. இணைச் செயலாளர் பதவிக்கு 4 வாக்குகளை அளிக்க வேண்டும்.
  6. செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 12 நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.

இந்தத் தேர்தலில் தற்போதைய நிர்வாகிகள் குழுவினர் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இந்தக் குழுவுக்கு தற்போதைய தலைவரான விக்ரமனே தலைமை தாங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். ‘புது வசந்தம் அணி’ என்கிற தலைப்பில் போட்டியிடும் இந்த அணியின் சார்பாக பொதுச் செயலாளர் பதவிக்கு பெப்சியின் தற்போதைய தலைவரான ஆர்.கே.செல்வமணி போட்டியிடுகிறார்.

இதேபோல் ‘புதிய அலைகள்’ என்கிற பெயரில் இன்னொரு அணியும் போட்டியிடுகிறது. இந்த அணியின் சார்பில் போட்டியிடுபவர்கள் தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கும் மட்டும் போட்டியிடாமல் மற்ற பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

மேலும் ஒரு சில உறுப்பினர்கள் சுயேச்சையாக பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.

தற்போது கடைசி கட்ட நிலவரப்படி களத்தில் இருப்பவர்கள் பட்டியல் இது :

தலைவர் பதவிக்கு திரு.விக்ரமன், திரு.முரளி அவர்களும்,

பொதுச் செயலாளர் பதவிக்கு திரு.ஆர்கே.செல்வமணி திரு.எம்.மருதுபாண்டியன் அவர்களும்,

பொருளாளர் பதவிக்கு திரு.ஏ.கே.டி.எல்லப்பன், ஆ.ஜெகதீசன், திரு.ம.பேரரசு அவர்களும் போட்டியிடுகிறார்கள்.

துணைத் தலைவர் பதவிக்கு திரு.கே.எஸ்.ரவிக்குமார், திரு.வ.சுப்ரமணியம்சிவா, திரு.ஆர்.வி.உதயகுமார் அவர்களும் போட்டியிடுகிறார்கள்.

இணைச் செயலாளர் பதவிக்கு அறிவழகன் (எ) சோழன், பாலமுரளிவர்மன், கோ.ஐந்துகோவிலான் (எ) ஐகோ, சா.மணிவண்ணன், மனோஜ்குமார், மூதுரை பொய்யா மொழி (எ) தோழர் மொழி, நாகராஜன் மணிகண்டன், ராஜாகார்த்திக், அ.ராமகிருஷ்ணன், என்.எஸ்.ரமேஷ்கண்ணன், எஸ்.ரவி (எ) எஸ்.ரவிமரியா, எ.வெங்கடேசன் போன்றோர் போட்டியிடுகிறார்கள்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு – தி.ஆறுமுகம், நீ.பூமிநாதன், சித்ரா லெட்சுமணன், என்.ஏகம்பவாணன், இளஞ்சூரியன், ல.எத்தீஷ்குமார், எஸ்.எழில், டி.பி.கஜேந்திரன், கே.ஜவஹர், எஸ்.கலைச்செல்வன், பெ.கமலக்கண்ணன் (எ) விருமாண்டி, கு.காமராஜ், ஆர்.கண்ணன் (எ) ஜெயம்கொண்டான் கண்ணன், ஆர்.கே.கண்ணன், கதிர் (எ) இதயம் கதிர், கதிர் (எ) கதிர்வேலு, மு.கிருஷ்ணமூர்த்தி, என்.லிங்குசாமி, ஜி.கே.லோகநாதன், மனோபாலா, ஆரல் தி.மனோகர் (எ) மனோ ராமச்சந்திரன், கே.மதிராஜா, ஆர்.முருகதாஸ் (எ) தாஸ் ராமசாமி, முத்துவடுகு, க.நம்பிராஜன் (எ) நம்பி, கேபிபி.நவீன், பரசு பாக்கியராஜ், ஜி.புருஷோத்தமன், கே.புருஷோத்தமன், ராஜா மகேஷ், ந.ராஜேந்திரகுமார், இ.ராம்தாஸ், ரத்னகுமார்.டி,ஜி.(எ) ரத்தன்கணபதி, மு.சண்முகம், எம்.சி.சேகர், ஆர்.ஷிபி, எ.சுகுமார் (எ)  சூர்யா, சுந்தர்.சி, எஸ்.திருமுருகன், எம்.வேடியப்பன், அ.வேல்மணி, எஸ்.ஜி.விஜயகுமார், டி.ஆர்.விஜயன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் அதிகாரி : K.பாலசுப்பிரமணியன் B.A.,B.L.

முன்னாள் மாவட்ட நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் பதிவாளா்.

கைபேசி : 99520 92938

தேர்தல் நாள் : 30-07-2017 – ஞாயிறுக்கிழமை

தேர்தல் நடக்கும் இடம் : தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அரங்கம்

நெ.157, (என்.எஸ்.கிருஷ்னன் சாலை, வடபழனி, சென்னை.26 (கமலா திரையரங்கம் அருகில்)

வாக்களிக்க விதிமுறைகள் :

வாக்களிக்கும் உறுப்பினர்கள் தனது உறுப்பினர் அடையாள அட்டை (MEMBERSHIP I.D.CARD)

அல்லது

2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கான சந்தா தொகை கட்டிய ரசீது

அல்லது

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில்(PHOTO COPY) ஏதாவது ஒன்றை தேர்தல் அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும். தவறினால் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.