தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு மாற்றியமைக்கப்பட்டது..!

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு மாற்றியமைக்கப்பட்டது..!

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியின்றி அனைத்து நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிர்வாகிகளை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கும் பொருட்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை வளசரவாக்கம் S.J.மஹாலில் நடைபெற்றது.

tantis-july-9-2015-meeting-15

துவக்கத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ஆர்.கே.செல்வமணி உரையாற்றினார். தேர்தல் என்பதை வீண் செலவாகக் கருதி தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை சங்கத்தின் தலைவர் விக்ரமன் சங்க உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

tantis-july-9-2015-meeting-3

செயலாளராக திரு.ஆர்.கே.செல்வமணியையும், பொருளாளராக திரு.வெ.சேகர் அவர்களையும், துணைத் தலைவராக திரு P.வாசு அவர்களையும், திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களையும், மற்றும் இணைச் செயலாளர்களான திரு.M.பேரரசு, திரு.சுந்தர்.C, திரு.M.ஏகம்பவாணன், திரு.N.லிங்குசாமி அவர்களையும் மேலும் செயற்குழு உறுப்பினர்களான திரு.N.S.ரமேஷ்கண்ணன், திரு.மனோபாலா, திரு.K.நம்பிராஜன், திரு.N.வேல்முருகன், திரு.ராஜாகார்த்திக், திரு.M.திருமலை, திரு.ஜெயம் ராஜா, திரு.S.ரவிமரியா, திரு.P.கமலக்கண்ணன் (எ) விருமாண்டி, திரு.மூதுரை பொய்யாமொழி, திரு.P.சமுத்திரகனி, திரு.ஐந்துகோவிலான் ஆகியோர்களை மேடையில் அறிமுகப்படுத்தினார் இயக்குநர் விக்ரமன்.

இந்தச் சிறப்புப் பொதுக் குழுவை நடத்துவதற்கான சரியான இடம் கிடைக்காததை பற்றி விளக்கினார். மேலும் சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அதிகரிப்பால் செயற்படுவதற்கான நிர்வாகிகளின் எண்ணிக்கையில் இணைச் செயலாளர் பதவியை 4-ல் இருந்து 5 ஆகவும் செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 12-லிருந்து 17 ஆகவும் உயர்த்துவதற்கு பொதுக்குழு அங்கீகாரம் அளித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி இணைச் செயலாளராக 

1 அ.செகதீசன்  

செயற்குழு உறுப்பினர்களாக 

1 மனோஜ்குமார், 2 R.புவனா, 3 R.கண்ணன், 4 R.K.கண்ணன், 5 R.ஜீவா 

ஆகியோர் இப்பொதுக்குழுக் கூட்டத்திலேயே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.

மேலும் நடிகர் சங்கத் தலைவர் திரு.சரத்குமார் அவர்கள் மற்றும் செயலாளர் திரு.ராதாரவி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி பேசினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தாணுவும் வந்திருந்து வாழ்த்தினார். திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக இயக்குநர் சங்கம் எடுக்கும் எல்லா செயல்பாடுகளுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்றார் தாணு.

மேலும், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி உரையாற்றும்போது, “சங்க உறுப்பினர்களுக்கு இலவச மனைகள் தருவதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…” என்றார். இது குறித்து தலைவர் விக்ரமன் பேசும்போது “வரும் இரண்டாண்டுகளில் சங்கத்தின் பிரதான நடவடிக்கையாக உறுப்பினர்களுக்கு இலவச மனைகள் அளிக்கும் பணியாகத்தான் இருக்கும்…” என்று தெரிவித்தார்.

மேலும் சங்கத்தின் அடுத்த தேர்தலிலிருந்து நிர்வாகப் பதவிக்குப் போட்டியிட விரும்பும் இயக்குநர், துணை, உதவி, இணை இயக்குநர்கள் அனைவருமே குறைந்தது 5 படங்களிலாவது பணி புரிந்திருக்க வேண்டும். அதில் ஒரு படமாவது வெளிவந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.




error: Content is protected !!