full screen background image

மெட்ராஸ், குக்கூ, ஜீவா, சதுரங்க வேட்டை படங்களுக்கு விருது..!

மெட்ராஸ், குக்கூ, ஜீவா, சதுரங்க வேட்டை படங்களுக்கு விருது..!

தமிழ் இலக்கிய வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் குறிப்பிடத்தக்க அமைப்பாக திகழ்ந்து வருகிறது ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்’.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு நிலை அமைப்பான இந்த அமைப்பில் பல எழுத்தாளர்கள், கலைஞர்கள் இணைந்துள்ளனர். 

கலை மற்றும் எழுத்துத் துறையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த அமைப்பு கலை, இலக்கியவுலகில் முக்கியப் பங்களை செலுத்தி வருகிறது.

வருடாவருடம் தமிழ்ச் சினிமாவில் மிக முக்கிய பங்களிப்பை செய்து வரும் திரைப்படங்களை தூக்கிப் பிடித்து அவற்றை பாட்டாளி சொந்தங்களிடம் கொண்டு செல்லும் அரியச் செயலையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.

அந்த வரிசையில் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகளை இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

awards-writers-association

‘மெட்ராஸ்’, ‘ஜீவா’, ‘குக்கூ’, ‘சதுரங்க வேட்டை’ ஆகிய நான்கு திரைப்படங்களையும் பாராட்டுக்குரிய, பெருமைக்குரிய திரைப்படங்களாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தில் பங்கு கொண்ட கலைஞர்களை பாராட்டுவதற்காக மிகப் பெரிய விழாவையும் இந்த அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. 

நாளை ஆகஸ்ட் 26, புதன்கிழமை மாலை 6 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள ஆனந்த் திரையரங்க வளாகத்தில் இருக்கும் உமாபதி அரங்கத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முக்கிய தலைவர்கள், பரிசு பெறவிருக்கும் திரைப்படங்களில் பணியாற்றிய முக்கியக் கலைஞர்களை பாராட்டிப் பேச இருக்கிறார்கள்.

Our Score