தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் அட்டவணை அறிவிப்பு..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் அட்டவணை அறிவிப்பு..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தேர்தல்  வருகிற ஜூன் 21-ம் தேதி (21.06.2020) நடைபெறவுள்ளது. 

அதற்கான முறைப்படியான அறிவிப்பினை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அலுவலர் நேற்று அறிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை நமது சங்க அலுவலகத்தில் வரும் 09.05.2020 முதல் அலுவலக வேலை நேரமான முதல் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை நேரில் வந்து பெற்று கொள்ளலாம். (Black & white address  book Rs. 500/-,  colour address book Rs. 2000/-)

தேர்தல் அட்டவணை :

1. 11.05.2020 காலை 10 மணி முதல் 14.05.2020 மாலை 5 மணிவரை வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். (ரூ.100 செலுத்தி உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம்). 14.05.2020 மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது.

2. 15.05.2020 காலை 10 மணி முதல் 19.05.2020 மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்துவிட வேண்டும். (விண்ணப்பப் படிவங்களை தபால் அல்லது courier-ல் அனுப்பும் உறுப்பினர்கள் 19.05.2020 மாலை 4 மணிக்குள் சங்க அலுவலகத்திற்கு கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது)

3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் உள்ள மூடி முத்திரையிட்ட பெட்டியில் வைக்கப்பட்டு 19.05.2020 மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்படும்.

4. 20.05.2020 காலை 10 மணி முதல் 24.05.2020 மாலை 4 மணிவரை வேட்பு மனு விண்ணப்பங்களை திரும்பப் பெற்று கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல் விண்ணப்பங்களை திரும்பப் பெற இயலாது.

5. 24.05.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

6. 25.05.2020 அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்ற  அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் 21.06.2020 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும்.

பின்னர் அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கொரணா வைரஸ்(COVID-19) ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் இடம் விசாரிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் :

தலைவர் பதவிக்கு - ரூ. 1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்)

மற்ற நிர்வாகிகள் பதவிக்கு -  ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு -  ரூ. 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்)

இப்படிக்கு

தனி அலுவலர் / தேர்தல் அதிகாரி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்