‘7 நாட்கள்’ படத்தில் டி.இராஜேந்தர் பாடிய பாடல் வெளியானது..!

‘7 நாட்கள்’ படத்தில் டி.இராஜேந்தர் பாடிய பாடல் வெளியானது..!

மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநரான கௌதம் V.R. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘7 நாட்கள்’.

இந்தப் படத்தில் இயக்குநர் P.வாசுவின் மகனான நடிகர் சக்தி வாசு மற்றும் நிகிஷா பட்டேல் ஜோடியாக நடித்துள்ளனர். மேலும், பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், M.S. பாஸ்கர் போன்றோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். M.S.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வெளிவர காத்திருக்கும் நிலையில் படத்தின் ஒரு பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மதன் கார்க்கியின் வரிகளில், டி. ராஜேந்தர் பாடிய பாடல் ‘புடிச்சிருக்க பெண்ணே சொல்லிப்புடு’ என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் ஹீரோ சக்தி வாசு, கணேஷ் வெங்கட்ராமன்,  இயக்குநர் கௌதம் V.R., இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் மற்றும் டி. இராஜேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். டி.இராஜேந்தர் பாடலை வெளியிட்டார்.
error: Content is protected !!