தணிக்கைக் குழுவில் ‘U/A’ சான்றிதழைப் பெற்ற ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

தணிக்கைக் குழுவில் ‘U/A’ சான்றிதழைப் பெற்ற ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.K.ராம் மோகன் தயாரித்துள்ள திரைப்படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’.

இந்தப் படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்திருப்பது படத்துக்கு ஒரு பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது.

ஒளிப்பதிவு – சுஜீத் சாரங், இசை – ஜாக்ஸ் பிஜாய், படத் தொகுப்பு – ஜி.ராமராவ், சண்டை இயக்கம் – தினேஷ் காசி.

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார்.

director myskin

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்கிற தலைப்பினாலும் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எதிர்பாராதவிதத்தில் வெளியானதாலும், மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை தூண்டிவிட்டிருக்கிறது.

படத்தின் காட்சி விளம்பரங்கள் இன்னும் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்து, படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றது.

அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த படம் இப்போது தணிக்கை சான்றிதழையும் பெற்று விட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்துக்கு ‘U/A’ சான்றிதழை அளித்திருக்கிறார்கள்.

IMG_3770

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ ஒரு தீவிர ஆக்ஷன் த்ரில்லர் படம். சண்டை இயக்குநரான தினேஷ் காசியும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, டூப் இல்லாமலும், கயிறு இல்லாமலும்  சண்டைக் காட்சிகளில் அவரே துணிந்து செய்திருக்கிறார்.

உயரமான ஒரு கட்டடத்திலிருந்து குதிக்கும்போது அவரது கால் முறிந்து விட்டது. ஆனாலும் அடுத்த 30 நிமிடங்களில் சக்கர நாற்காலியில் படப்பிடிப்புக்கு திரும்பி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

இந்தப் படத்தின் 80% படப்பிடிப்பு சண்டை கலைஞர்களை வைத்துதான் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது, இந்த படம் ஒரு மிகச் சிறந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என உறுதியளிக்கலாம்.

படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும்.




error: Content is protected !!