‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..!

‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..!

‘வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து, ‘மிர்ச்சி’ சிவா, பிரியா ஆனந்த் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘சுமோ’.

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

இயக்கம் – எஸ்.பி.ஹோசிமின், தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்- Dr.ஐசரி K.கணேஷ், நிர்வாக தயாரிப்பு – K.அஷ்லின் குமார், திரைக்கதை, வசனம் – மிர்ச்சி சிவா, ஒளிப்பதிவு – ராஜிவ் மேனன், இசை – நிவாஸ் கே.பிரசன்னா, படத் தொகுப்பு – பிரவீன் கே.எல்., கலை இயக்கம் – கார்த்திக், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது.

sumo-movie-stills-2

இந்தோ-ஜப்பானிஸ் கூட்டுத் தயாரிப்பான இந்த ‘சுமோ’ திரைப்படம், ஜப்பானிய மல்யுத்த வீரர்களான சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாகும்.

ஜப்பானில் பாடல் காட்சிகள் & படபிடிப்பு நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் அங்கே பெரும் பொருட் செலவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் ஜப்பானிய சுமோ வீரர் வேடத்தில் ஜப்பானில் பிரபலமான சுமோ வீரரான யோஷினோரி  தாஷிரோ நடித்துள்ளார்.

இதேபோல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வி.டி.வி.கணேஷ் நடித்திருக்கிறார். மிர்ச்சி சிவாவுடன் படம் முழுவதும் பவனிவரவுள்ள யோகிபாபுவின் நகைச்சுவை இந்தப் படத்திலும் களை கட்டியுள்ளது.

நடிகர் சிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல்முறையாக திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரையிலும் ரசிக்கக் கூடிய ஜனரஞ்சகமான திரைப்படம் இது.

இத்திரைப்படம் வரும் நவம்பர் மாதத்தில்  திரைக்கு வர இருக்கிறது.




error: Content is protected !!