கோட்டூர்புரம் சூர்யா நகரை தத்தெடுத்தனர் சுஹாசினி-மணிரத்னம் தம்பதியினர்..!

கோட்டூர்புரம் சூர்யா நகரை தத்தெடுத்தனர் சுஹாசினி-மணிரத்னம் தம்பதியினர்..!
இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் இருவரும் தங்களின் ‘நாம் இயக்க’த்தின் சார்பாக சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள சூர்யா நகரை தத்தெடுத்துள்ளனர்.
தமிழக அரசு வேண்டிய நிவாரண உதவிகளை செய்து வரும் இந்த நிலையில், ‘நாம் இயக்கம்’ அரசுக்கு தோள் கொடுத்து உதவும் வகையில் பணியை செய்து வருகிறது.
சூர்யா நகரை தத்தெடுத்த பின் முதல்கட்டமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் தலைமையிலான நாம் குழுவினர் வழங்கினார்கள்.
மேலும் மருத்துவ உதவிகள், கலந்தாய்வுகள் உட்பட பல உதவிகளை தொடர்ந்து செய்யவுள்ளனர்.error: Content is protected !!