full screen background image

நட்சத்திர கிரிக்கெட்..!

நட்சத்திர கிரிக்கெட்..!

இந்தியாவில் கிரிக்கெட் என்பதே ஒரு மதமாகிவிட்டதே..? அதன் மூலம் வரும் வருவாயும், புகழும் இன்னொரு பக்கம் போதையைத் தூண்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறது. இதில் சினிமா நடிகர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? வருடாவருடம் படங்களில் நடிக்கிறார்களோ இல்லையோ.. தமிழ்ச் சினிமாவின் இன்றைய இளைய நடிகர்கள் அத்தனை பேரும் செலிபிரிட்டி கிரிக்கெட் எனப்படும் சிசிஎல் கிரிக்கெட்டில் மல்லுக்கட்டி விளையாடி வருகிறார்கள்.

அந்தந்த மாநில இளைய நடிகர்களை டீம், டீமாக மோதவிட்டு கிரிக்கெட்டையும், அதன் மூலம் கிடைக்கும் வர்த்தகத்தையும் அதிகப்படுத்தும் திட்டமாக சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த சிசிஎல் தொடங்கப்பட்டது. இப்போது இது அமோகமாக வளர்ச்சியடைந்து இந்திய கிரிக்கெட் போர்டுக்கே சவால்விடும் வகையில் வளர்ந்திருக்கிறது.. விளம்பரங்களும், டிவி சேனல் ஒளிபரப்புகளும் இதனை மிகப் பெரிய வர்த்தகத் துறையாக வளர்த்துவிட்டிருக்கிறது.. 

இதில் ‘மும்பை ஹீரோஸ்’ என்றழைக்கப்படும் பாலிவுட் டீமுக்கு சுனில்ஷெட்டி கேப்டனாக இருக்கிறார். ‘தமிழ் ரைனோஸ்’ என்றழைக்கப்படும் கோடம்பாக்க டீமுக்கு விஷால் கேப்டன். ‘தெலுங்கு வாரியர்ஸ்’ என்றழைக்கப்படும் டாலிவுட்டுக்கு வெங்கடேஷ் கேப்டன். ‘கர்நாடகா புல்டோஸர்ஸ்’க்கு சுதீப் கேப்டன்.. ‘கேரளா ஸ்டிரைக்கர்ஸு’க்கு ராஜீவ்பிள்ளை கேப்டன்.. ‘பெங்கால் டைகர்ஸு’க்கு ஜூஸு கேப்டன்.. ‘மராத்தி’ டீமுக்கு ரித்தீஷ் தேஷ்முக் கேப்டன்.. ‘போஜ்பூரி டபாங்க்ஸு’க்கு மனோஜ் திவாரி கேப்டன்..

கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்கிறார்களோ இல்லையோ.. கிரவுண்டில் நடக்கும் ஒவ்வொரு மூவ்மெண்ட்டுக்கும் கேலரியில் அமர்ந்திருக்கும் அந்தந்த அணியின் பிராண்ட் அம்பாசிடர்களான நடிகைகள் காட்டும் அலப்பறையை பார்க்கவே ஒரு கூட்டம் டிவி பெட்டி முன் உட்கார்ந்திருக்கிறது.. தமிழ் டீமுக்கு திரிஷாதான் அம்பாசிடர்..! தெலுங்குக்கு ப்ரியாமணியும், சார்மியும் கலக்குகிறார்கள்.. மலையாளத்திற்கு லிஸியும், பாவனாவும், மைதிலியும் விதவிதமான ஆக்சனை காட்டி ரிமோட்டை மறக்கடிக்கிறார்கள்.. இதில் ஒவ்வொரு பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் குத்தாட்டம் போட அழகிகளும் உண்டு..!  

இப்படி திரை நட்சத்திரங்கள் கிரிக்கெட் கிரவுண்ட்டில் இந்த மாதம் முழுவதும் தங்களது விளையாட்டுத் திறமையைக் காட்டி வருகிறார்கள்..! சினிமா ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களையும் ஒரு சேர அமர வைத்து பார்க்க வைப்பது இந்தக் கிரிக்கெட் திருவிழாதான்..!  இங்காவது இவர்களது துடிப்பான ஆட்டத்தை பார்க்கலாமே..?!  

Our Score



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *