“கிளாமர்ன்னா என்னங்க..?” ஸ்ருதிஹாசன் கேட்ட மில்லியன் டாலர் மதிப்புள்ள கேள்வி..!

“கிளாமர்ன்னா என்னங்க..?” ஸ்ருதிஹாசன் கேட்ட மில்லியன் டாலர் மதிப்புள்ள கேள்வி..!

நடிகை ஸ்ருதிஹாசன் பிரஸ்மீட்டுக்கு வருவதே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறைதான்.. அப்படித்தான் நேற்றைக்கு ‘பூஜை’ படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சிக்கு வந்தார். அதுவும் தாமதமாக..!

மேடையில் பேசிய ஸ்ருதி, “பூஜை நல்ல படம். இதில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு இதில் ஒரு புதிய அனுபவமும் கிடைத்தது.  நல்ல புரொடெக்சன் கம்பெனி.. ஹரி ஸார்கூட ஒர்க் செஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.. இந்தப் படம் ரசிகர்களுக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கும்.. அனைவரைக்கும் சந்தோஷத்தையும் கொடுக்கும்னு நம்புறேன்..” என்றார்.

கேள்வி-பதில் சீஸனில் “நீங்கள் ஏன் தமிழில் அதிகம் நடிப்பதில்லை…?” என்று கேட்ட கேள்விக்கு, “நான் ஒரு இந்திய நடிகை எனக்கு தமிழில் மட்டுமல்லாது… தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதனால் தமிழில் மட்டுமே என்னால் அதிக கவனம் செலுத்த முடியாது.

‘ஏழாம் அறிவு’ படத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பூஜை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடையில் சில வாய்ப்புகள் வந்தாலும், தேதிகள் இல்லாததால் அந்தப் படங்களில் நடிக்கவில்லை…” என்றார்.

இந்தப் படத்தில் அவருடைய கேரக்டர் பற்றி சொன்னபோது, “படத்துல என் கேரக்டர் ரொம்ப மாடர்னான கேர்ள்.. எதையும் கவலைப்படாமல் டேக் இட் ஈஸியா எடுத்துக்குற பொண்ணு.. என் கேரக்டருக்கு பொருத்தமா இருந்துச்சு.. இதனாலும் இந்தப் படத்துல நான் நடிக்க ஒத்துக்கிட்டேன்..” என்றார்.

“கல்யாணம் பண்ணிக்காமயே குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்னு சொல்லியிருக்கீங்களே.. இது தப்பில்லையா..? என்று கேட்க, அவசரமாக மறுத்த ஸ்ருதி,  “நான் அப்படி சொல்லவே இல்லை…” என்றார்.

“சில படங்களில் அதிக கிளாமரா நடிக்கிறீர்களே…?” என ஒரு கேள்வி கேட்க.. “கிளாமர்னா என்னங்க… இப்போவரைக்கும் அதுக்கென்ன அர்த்தம்ன்னு எனக்கு தெரியலை…” என்றார் அப்பாவியாய்.

நிருபர்களும் சேர்ந்து சிரித்தது இந்தக் கேள்வி பதிலுக்குத்தான்..!

ஸ்ருதி கேக்குறதும் கரெக்ட்தானே…? கிளாமர்ன்னா என்னங்கய்யா..?




error: Content is protected !!