நடிகை சோனாவின் ஆச்சரியமான பிறந்த நாள் பரிசு..!

நடிகை சோனாவின் ஆச்சரியமான பிறந்த நாள் பரிசு..!

பரபரப்பு நாயகியான நடிகை சோனா தனது பிறந்த நாளான ஒவ்வொரு வருட ஜூன்-1-ம் தேதியன்றும், ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்தில் நேரத்தை செலவழித்தும், அங்கேயிருப்பவர்களுக்கு உதவிகளைச்  செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்தாண்டு அதைவிட பெரிய அளவுக்கான ஒரு சேவையைச் செய்யவிருக்கிறாராம்.. இந்த பிறந்த நாளன்று தன் உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானமாகத் தரவிருக்கிறாராம் சோனா. மக்களிடையே உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சோனா இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

கண் தானம் போலவே உடல் தானம் பற்றிய விழிப்புணர்வும் சமீப காலமாக நாட்டில் பேசப்பட்டு வருகிறது. பரப்பப்பட்டு வருகிறது.. இறந்த பின்பு எரியூட்டி சாம்பலாக்கி கடலில் கரைப்பதற்குப் பதிலாக நல்ல நிலையில் இருக்கும் நமது உடல் உறுப்புக்ள் தேவையான சில மனிதர்கள் வாழ்வதற்கு உதவினால் அதைவிட பெரிய உதவி வேறெதுவும் இருக்க முடியாது..

சோனாவின் இந்த நல்ல முடிவுக்கு நமது வாழ்த்துகள்..!
error: Content is protected !!