சின்னத்திரை நடிகர் சங்கத்தின் ஆண்டு விழா..!

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் ஆண்டு விழா..!

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார். கிங்க்ஸ் நெட்வொர்க் கம்பெனி  A.R.பிரபு விழாவிற்கான அணைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் சின்னத்திரை நடிகர், நடிகைகளின் பெயர், விலாசம், புகைப்படம் அடங்கிய டைரி ஒன்றை நடிகர் விஷால் வெளியிட்டார்.

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் இணையத் தளத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் நடிகர்கள் சின்னி ஜெயந்த், விமல், சூரி, ரோபோ சங்கர், நடிகைகள் குஷ்பு, குட்டி பத்மினி, மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் செயலாளர் போஸ்வெங்கட் அனைவருக்கும் நன்றி கூறினார்.