விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்திற்காக பிரமாண்டமான செலவில் உருவான பாடல் காட்சி

விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்திற்காக பிரமாண்டமான செலவில் உருவான பாடல் காட்சி

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க, மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமான செலவில் தயாராகும்  படம் ‘ஸ்கெட்ச்’.

இந்தப் படத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா,  விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா  ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்துள்ளார்.

இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – சுகுமார், பாடல்கள் – கபிலன், விவேக், விஜய்சந்தர், கலை – மாயா பாண்டியன். படத் தொகுப்பு – ரூபன், நடனம் – பிருந்தா, தஸ்தாகீர், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன், தயாரிப்பு நிர்வாகம் – V.ராமச்சந்திரன், தயாரிப்பு – மூவிங் பிரேம், எழுத்து, இயக்கம் – விஜய்சந்தர். 

இந்தப் படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு அதில் ‘அச்சி புச்சி ஸ்கெட்சு’ என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இந்தப் பாடல் காட்சியில் நாயகன் விக்ரமுடன் 150 நடனக் கலைஞர்கள் மற்றும் 1500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்களும் நடித்தார்கள். நடன இயக்குநரான தஸ்தாகீரின் மேற்பார்வையில் இந்த நடனம் படமாக்கப்பட்டது. 

வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் படம் இது. படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது. பாடல் வெளியீட்டு விழா  மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.




error: Content is protected !!