சிவகார்த்திகேயன் – நயன்தாராவுடன் இணைந்த ராதிகா சரத்குமார் 

சிவகார்த்திகேயன் – நயன்தாராவுடன் இணைந்த ராதிகா சரத்குமார் 

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ‘SK-13’ என்ற பெயரிடப்படாத படம், தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கி வருகிறார்.

இந்த SK-13 படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

ராஜேஷ் போன்ற மிகவும் எளிமையான, ஜாலியான ஒரு இயக்குநர் இருக்கும்போதே படப்பிடிப்பு தளம் கலகலப்பாகவும், பாசிட்டாவாக  இருக்கும். தற்போது இன்னும் ஒரு பாசிட்டாவான நபரும் படத்துக்குள் வந்திருக்கிறார். தற்போது SK-13 படத்தில் ராதிகா சரத்குமாரும் நடித்து வருகிறார். 

இது குறித்து இயக்குநர் ராஜேஷ் கூறும்போது, “எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும்,  நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது.

தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா  போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம். 

நிச்சயமாக, சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்வோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருப்பார். நயன்தாரா இத்தனை ஆண்டுகள் கழித்தும் உச்சத்தில் இருப்பதை வைத்தே அவரின் ஆற்றலை அறிந்து கொள்ளலாம்.

இப்போது, ராதிகா மேடமும் இந்த படத்தில் சேர்ந்தது, படத்துக்குள் இன்னும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. ராதிகா மேடம் அவர்களுக்கு என்றே வடிவைமைத்த கதாபாத்திரம் இது என சொல்லலாம். அவரைத் தவிர இத்தகைய கதாபாத்திரங்களுக்கு யாரும் உயிர் தந்துவிட முடியாது.

ஹிப் ஹாப் ஆதியின் இசை படத்துக்கு மேலும் வலு சேர்க்கும். சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், இத்தகைய பெரிய இயல்பான மனிதர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது எங்களது படத்தை மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்க உதவுகிறது என்பதை  உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

 
error: Content is protected !!