சிக்ஸர் அடிக்கக் காத்திருக்கும் ‘சிக்சர்’ திரைப்படம்

சிக்ஸர் அடிக்கக் காத்திருக்கும் ‘சிக்சர்’ திரைப்படம்

வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சிக்ஸர்’.

அறிமுக இயக்குநரான சாச்சி இயக்கியிருக்கும் இந்தப் படம், மிக விரைவாக படப்பிடிப்பை முடித்திருக்கிறது. 

இத்திரைப்படம் படம் பற்றி தயாரிப்பாளர்களான தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர். பேசுகையில், “சிக்ஸர் என்பதுதான் படத்தின் தலைப்பு என்றாலும் இந்தப் படத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ‘சிக்ஸ்’ என்ற வார்த்தை திரைக்கதையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பல புள்ளிகளை இது இணைக்கிறது.

இந்தக் கதைக்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் கொண்ட, அதை திறம்பட செய்யும் நடிகர் வைபவ் அந்தக் கதாபாத்திரத்துக்கு மிக பொருத்தமாக இருந்தார். பல்லக் லால்வானி நாயகியாக நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

நல்ல துடிப்பான இளைஞர்கள் குழு, கதையிலும், மிகச் சிறப்பாக படத்தை முடிக்கவும் உறுதுணையாக இருந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன, கோடை விடுமுறையின் இரண்டாம் பாதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.

தலைப்புக்கு ஏற்றவாறே நாங்கள் சிக்ஸர் அடிக்க முயற்சித்திருக்கிறோம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் சார் இந்த படத்தை வணிக அளவில் கொண்டு சேர்க்க மிகவும் உறுதுணையாக இருக்கிறார், அவருக்கு எங்கள் நன்றி” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.




error: Content is protected !!