‘U’ சான்றிதழ் பெற்றது வைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்’ திரைப்படம்.

‘U’ சான்றிதழ் பெற்றது வைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்’ திரைப்படம்.

வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்ஸர்’.

இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும், நாயகியாக பல்லோக் லால்வானியும் நடித்துள்ளனர். மேலும், ராதாரவி, இளவரசு, சதீஷ், ராமர், மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – பி.ஜி.முத்தையா, படத் தொகுப்பு – ஜோமின்,  கலை இயக்கம் – என்.கே. ராகுல், நடன இயக்கம் – சாம், ராம்குமார் பாடல்கள் – ஜி.கே.பி.லோகன், அன்பு.

அறிமுக இயக்குநரான சாச்சி இயக்கியிருக்கும் இந்தப் படம், மிக விரைவாக படப்பிடிப்பை முடித்திருக்கிறது. 

இந்தப் படத்திற்கு இப்போது சென்சாரில் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் பார்க்கும் வகையிலான ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இது பற்றிப் பேசிய தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன், “இந்தப் படத்தின் கதையை கேட்ட உடனேயே இது எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படம் என்பதையும், அதற்கான சான்றிதழையும் பெறும் என்று உறுதியாக நம்பினேன். அதுவேதான் இப்போது நடந்திருக்கிறது.

குடும்பத்தோடு திரை அரங்குக்கு வரும் ரசிகர்களை கவரும் வண்ணம் இந்தப் படம் ஜனரஞ்சகமான படமாக  இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கதாநாயகன் வைபவுக்கு ஏற்ற கதாபாத்திரம். நகைச்சுவை மிளிர நடிப்பதற்கு ஒரு தனித்துவமான திறமை வேண்டும், அதில் வைபவ் மிக மிக திறமையானவர். தயாரிப்பாளராக, நானும் எனது நண்பர் ஸ்ரீதரும் படத்தை பார்த்து மிக, மிக மகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சி ரசிகர்களுக்கும் கிட்டும் என்பதில் ஐயமில்லை..” என்கிறார் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன். 




error: Content is protected !!