கேரள திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்

கேரள திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்

சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு 28-வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இயக்குநர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் தேர்வாகியுள்ளது.  

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ‘மயக்கம் என்ன’ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து  மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யேகமாக பின்னணி இசை இல்லாதது மும்பை திரைப்பட விழாவில் அனைவரின் பாராட்டினையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ்.சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.   
error: Content is protected !!