உசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்

உசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களை பாராட்டி, கெளரவித்த நடிகர் சிவகார்த்திகேயன்

திரைப்பட இயக்குநர்கள் பொன்ராம் மற்றும் M.P.கோபி இருவரும் படித்த உசிலம்பட்டி  அரசு மேல்நிலைப் பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிப்பதற்காக மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடந்த இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டன.

இதில் வெற்றி பெற்ற அணியினரை திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் சென்னைக்கு வரவழைத்து மதிய விருந்தும், விருதும் கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளார்.

8

இந்தப் பாராட்டு விருந்து STUDIO GREEN நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்றது.

விருதுகளைப் பெற்ற அனைத்து வீரர்களும் இந்த விருந்திலும், சிவகார்த்திகேயனின் அன்பிலும், திளைத்துப் போய் “கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களை சென்னைக்கு அழைத்து சிவகார்த்திகேயனின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் மகிழ்ச்சியடைகிறோம்…” என்று நன்றியோடு தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு பற்றி இயக்குநர்கள் பொன்ராம் மற்றும் M.P.கோபி இருவரும் பேசுகையில், “நாங்கள் படித்த உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும்வகையில் ஏதாவது ஒரு விழா  நடத்த வேண்டுமென்று ரொம்ப நாளாக நினைத்திருந்தோம்.

1 (1)

அப்போதுதான் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளிவந்த ‘கனா’ படம் எங்களுக்குள் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் பள்ளியிலேயே மாவட்ட அளவில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.

அதன் காரணமாக சிவகார்த்திகேயனிடம் நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம். ஆனால், அப்போது இடைவிடாத படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் வர இயலவில்லை.

அதற்குப் பதிலாக அவருடைய ‘கனா’ படத்தின் ஹீரோவான தர்ஷனையும், அந்தப் படத்தில் காமெடியனாக நடித்த  டேனியல் பாக்கியராஜையும், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தின் மாநிலத்  தலைவரான மோகன்தாஸையும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் இயக்குநர் எம்.ராஜேஷையும் விழாவிற்கு அனுப்பி வைத்தார். 

அது மட்டும் இல்லாமல். வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும். விருந்தும் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு மிகப் பெரிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..” என்றனர்.