மாலா மணியனின் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி இயக்கும் ‘சிறகு’ திரைப்படம்..!

மாலா மணியனின் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி இயக்கும் ‘சிறகு’ திரைப்படம்..!

தமிழ்த் திரைப்படத் துறையில்  அனுபவமிக்க  நிர்வாகத் தயாரிப்பாளராகப்  பல  ஆண்டுகள் பணியாற்றிய மாலா மணியன் தனது FIRST COPY PRODUCTIONS  நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள முதல் திரைப்படம் ‘சிறகு’.

21 

‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘வடசென்னை’, ‘சண்டைக்கோழி-2’, ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய  படங்கள்  மூலம்  நமக்கு  அறிமுகமான  ஹரிகிருஷ்ணன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நடனத்திலும்,  யோகாவிலும்  சிறந்து விளங்கும்,  அழகிய  இளம்  பெண்ணான அக்ஷிதா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

18

டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  காளி வெங்கட்  நட்புக்காக இணைந்துள்ளார்.

தயாரிப்பு – மாலா மணியன், தயாரிப்பு நிறுவனம் – First Copy Productions, எழுத்து & இயக்கம் – குட்டி ரேவதி, ஒளிப்பதிவு –  ராஜா பட்டச்சார்ஜி, இசை -அரோல் கொரேலி, படத் தொகுப்பு – வி,எஸ்.அருண் குமார், பாடல்கள் – குட்டி  ரேவதி, அறிவு.

19

இசையும், பயணமுமாய் இரண்டறக் கலந்திருக்கும் கதைக் களம்தான் இத்திரைப்படம். சென்னையில் தொடங்கும்  இப்பயணம்  கன்னியாகுமரிவரை  நீள்கிறது. எல்லோரும்  இயந்திர கதியில்  ஓடிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு  இயைந்த  பயணமும், இசையுமே வாழ்க்கையில் புத்துணர்வைக்  கொடுக்கும்  என்கிறது இந்த ‘சிறகு’ திரைப்படம்.