விஜய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..!

விஜய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..!

‘பாகுபலி-2’ திரைப்படத்தை வெளியிட்டவரும், ‘ப்யார்  ப்ரேமா காதல்’ திரைப்படத்தை தயாரித்தவருமான  K புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் S.N.ராஜராஜனும், ‘சேதுபதி’ திரைப்படத்தை தயாரித்த வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷனும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சிந்துபாத்’.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, படம் முழுவதும் வரும் மிக முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார்.

‘சேதுபதி’ திரைப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக நடித்த லிங்கா, இப்படத்தில் தாய்லாந்தை சேர்ந்த வில்லனாக நடித்துள்ளார்.

‘சேதுபதி’யில் நடித்த நடிகர் விவேக் பிரசன்னாவும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் ஜார்ஜ் நடித்துள்ளார். பட ரிலீசுக்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் ஜார்ஜ் கூட்டணி ரசனையான பேசு பொருளாக மாறும். மேலும் மலேசியாவை சேர்ந்த நடிகர்கள் கணேசன் மற்றும் சுபத்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ‘சிந்துபாத்’ திரைப்படம் முற்றிலும் ஆக்க்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

Sindhubaadh Movie Stills (4)

ஒரு எளிய மனிதன் தன்னுடைய எளிமையான வாழ்க்கையை வாழ, இந்தச் சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது என்பதையும் அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக உருவாகியுள்ளது இந்த ‘சிந்துபாத்’ திரைப்படம்.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்கு பிறகு இயக்குநர் S.U.அருண்குமாருடன் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி இந்த ‘சிந்துபாத்’ படத்தில் இணைந்திருக்கிறார்.

இயக்குநர்  S.U.அருண்குமார் ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்திற்கு பிறகு வேறுபட்ட கதைக் களத்தில் ‘சேதுபதி’ திரைப்படத்தை இயக்கியதைப் போல தனது மூன்றாவது படமான இந்த ‘சிந்துபாத்’ படத்திலும் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக் களத்தைத் தொட்டுள்ளார்.  

நாயகி அஞ்சலி நீண்ட நாட்களுக்கு பிறகு வலிமையான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்சலிக்கும், விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளனவாம். அஞ்சலியின் நடிப்பு இத்திரைப்படத்தில் பெரிதாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதியும் அவரது மகன் சூர்யா விஜய் சேதுபதியும் தென்காசியில் சிறு, சிறு திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். இப்படம் சூர்யா விஜய் சேதுபதிக்கு சிறந்த அடையாளமாக அமையும்.

வில்லனாக நடித்திருக்கும் லிங்கா தனது கேரக்டருக்காக சுமார் 18 கிலோ உடல் எடையைக் கூட்டி முரட்டுத்தனமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த வில்லன் கதாப்பாத்திற்காக தாய்லாந்து மொழியைக் கற்றுக் கொண்டு பேசவும், உடல் எடையைக் கூட்டவும் ஒரு வருடம் கடுமையாக உழைத்துள்ளார்.

இந்த ‘சிந்துபாத்’ திரைப்படம் தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

Sindhubaadh Movie Stills (1)

இந்தப் படத்தில் வழக்கமான தமிழ்ப் படங்களைப் போல வெளிநாட்டு காட்சிகளைக் காட்சிப்படுத்தாமல் தாய்லாந்து மற்றும் மலேசியா மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும்விதமாகக் காட்சிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘இறவாக் காலம்’ திரைப்படத்திற்குப் பிறகு விஜய் கார்த்திக் கண்ணன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆல்பங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆவார். மேலும் பல விளம்பரப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படத்திற்காக படப்பிடிப்பு நடைபெற்ற தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து என வெவ்வேறு கலாச்சார பின்னணியைக் கொண்ட பகுதிகளைப் பதிவு செய்வதில் மிகுந்த சிரத்தை எடுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்.

பல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் பணியாற்றிய பிரபல சண்டை இயக்குநரான Nung aka Praditseeluem கதைப்படி தாய்லாந்தில் நடக்கும் ஒரு சண்டையை மிகப் பிரம்மாண்டமான முறையில் இயக்கியுள்ளார்.

சண்டை காட்சிகள் பிரம்மாண்டமாகவும் அதே சமயத்தில் எதார்த்தத்தை மீறாத வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி இருக்கும் நிலையில் படத் தொகுப்பாளர் ரூபனின் பணியும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு புதிய கண்ணோட்டத்தில் இந்தப் படத்தினை படத் தொகுப்பு செய்துள்ளார்.

இயக்குநர் S.U.அருண்குமாரின் திரைப்படங்களில் இசைக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். இந்தப் படத்தில் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஐந்து பாடல்களும் ஐந்து விதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட் ஆல்பமாக இத்திரைப்படத்தின் பாடல்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் பின்னணி இசையினை உலகத் தரத்தில் யுவன் ஷங்கர் ராஜா கொடுத்துள்ளார். தற்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு துபாயில் பரபரப்பாக நடந்து வருகிறது.

படத்தின் Post Production வேலைகள் 80 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், படத்தில் நடித்தவர்களே சொந்தக் குரலில் பேசினால்தான் படத்தில் யதார்த்தத்தையும் உண்மைத் தன்மையையும் காட்ட முடியும் என்பதால் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணிக்காக இயக்குநர் அருண்குமார் விரைவில் தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கு செல்ல இருக்கிறார்.
error: Content is protected !!