சிம்பு-கவுதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம்..!

சிம்பு-கவுதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம்..!

நடிகர் சிம்புவின் நடிப்பில் தனது அடுத்தத் தயாரிப்பைத் துவக்குவதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘தயாரிப்பு எண்-20’ என்ற தற்காலிகப் பெயர் கொண்ட இத்திரைப்படத்தில் சிம்புவுடன், நடிகர் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார்.

நவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், மதன் கார்க்கி வசனகர்த்தாவாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படம் கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘முஃப்தி’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்காகும்.  இதில், ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக்கும், புனித் ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கவுள்ளனர்.

கன்னடத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதனை மட்டும் தமிழில் கொஞ்சம் குறைக்க படக் குழு முடிவு செய்துள்ளது.

‘முஃப்தி’ கன்னட படத்தை இயக்கிய இயக்குநரான நர்த்தனே தமிழிலும் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ‘K.G.F.’ படத்தின் இயக்குநரான பிரஷாந்த் நீலிடம் துணை இயக்குநராகப் பணி புரிந்தவர். 

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறும்போது, “இது மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஒரு ஆக்‌ஷன் திரில்லர். இது படத்தை மிகவும் உயர்த்தி சொல்வதாக தோன்றலாம், ஆனால் ஸ்கிரிப்ட் மற்றும் அது வைத்திருக்கும் வலுவான கதைதான் இதற்கு காரணம்.

இயக்குநர் நர்த்தன் கதையை விவரிக்க ஆரம்பித்தபோதே ஆரம்ப காட்சிகளிலேயே இதை மெகா பட்ஜெட் படம் என்ற பட்டியலில் சேர்க்க முடியும் அளவுக்கு இருந்தது. ஒரு சில காட்சிகளிலேயே, படத்தின் ஆக்‌ஷன் அம்சங்களை என்னால் தன்னிச்சையாக உணர முடிந்தது,

மேலும், பார்வையாளர்களின் ரசனையை கவர இன்னும் பல காரணங்களை இந்த கதை கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. படம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்குள் நான் இப்போதே போய்விட்டேன்.

குறிப்பாக, STR போன்ற ஒரு வெகுஜன ஹீரோ அவரது முத்திரையுடன் ஈடு இணையற்ற ஒரு நடிப்பை கொடுக்கும்போது, படத்துக்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கௌதம் கார்த்திக் போன்ற மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

மற்றும் இந்தப் படத்தில் பணியாற்ற முன்னணி கதாநாயகிகள், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவற்றை இறுதி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.

2019 ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது,
error: Content is protected !!