நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரை முன் மொழிந்த கமல்ஹாசன்.

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரை முன் மொழிந்த கமல்ஹாசன்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜய ரத்தினம், சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் கார்த்தியின் வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் பின்னர் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசர் பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார்.

WhatsApp Image 2019-06-09 at 4.37.19 PM

அப்போது, “இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல். கடந்த முறை நாங்கள் தேர்தலை வேறொரு களத்தில் வேறொரு சூழ்நிலையில் சந்தித்தோம். இந்த முறை வேறொரு களமாக இருக்கிறது. அதை சந்திக்க வேண்டியது எங்களது கடமை. நாங்கள் கடந்த 3 ஆண்டு காலம் செய்த பணிகள் எங்களுக்குச் சாட்சியாக நிற்கின்றன. அதை நம்பி நாங்கள் போட்டியிடுகிறோம். எங்கள் சங்க உறுப்பினார்களின் மிகப் பெரிய ஆதரவு பாண்டவர் அணிக்கு இருக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.

WhatsApp Image 2019-06-09 at 4.37.56 PM

“நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இருக்கிறதா?” என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் நாசர், “அரசு அல்லது கட்சிகளின் தலையீடு நடிகர் சங்கத்தில் சுத்தமாக கிடையாது. அரசியல் குறுக்கீடு இருந்திருந்தால் தலைவர் என்ற முறையில் முதல் குறுக்கீடு எனக்குத்தான் வந்திருக்க வேண்டும். என்னிடம் யாரும் அப்படி பேசவில்லை.

இன்றைய சூழலில் மாநில அரசுக்கு இதைவிட பெரிய பொறுப்புக்களும், கடமைகளும் இருக்கின்றன. அதைக் கவனிக்க வேண்டியவர்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த சிறு அமைப்பில் குறுக்கிடுவார்கள் என்பது அவர்கள் மீது வைக்கும் தப்பான விஷயம்.

தனிப்பட்ட முறையிலும் சரி பொதுவாகவும் சரி. இந்த அமைப்பு எந்த ஒரு பாகுபாடுமின்றி செயல்படும். மத பாகுபாடோ அல்லது அரசியல் பாகுபாடோ சங்கத்தில் எந்தவித பாகுபாடும் இல்லை. நடிப்பு, நடிகர்களுடைய உரிமை, அவர்களுடைய வாழ்வு முறை, இதற்குத்தான் இங்கே முன்னுரிமை.” என்றார்.

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரின் வேட்பு மனுவை நடிகர் கமல்ஹாசன் முன் மொழிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 




error: Content is protected !!