full screen background image

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-2019 – 1604 பேர் வாக்களித்தனர்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019-2022-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று சென்னை, மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் எப்பாஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணிவரையிலும் நடைபெற்ற இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்தும் உறுப்பினர்கள் திரளாக வந்து தங்களது வாக்கினை அளித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மொத்தமுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 3644. இதில் வாக்களிக்கும் தகுதியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 3173.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கும் என்று அறிவித்திருந்தாலும் காலை 7.30 மணிக்குத்தான் வாக்குப் பதிவு துவங்கியது.

மாலை 5 மணிவரையிலும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் 1604 பேர் வாக்களித்தனர். இவர்களில் 1164 பேர் ஆண்கள். 440 பேர் பெண்கள்.

தபால் வாக்குகளில் சுமாராக 1000 பேர் வாக்களித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரில் வந்து வாக்களித்தவர்கள் விவரம் :

நடிகர்கள் : கமல்ஹாசன், விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சிவக்குமார், கார்த்தி, நாசர், சூர்யா, விஜய்குமார், சரத்பாபு, சந்தானபாரதி, சஞ்சய் பாரதி, பிரபு, விக்ரம் பிரபு, செந்தில், டெல்லி கணேஷ், கவுண்டமணி, சிபிராஜ், ஹரிஷ் கல்யாண், விவேக், காந்த், ஆர்.கே.சுரேஷ், விஜய் பாபு, இளவரசு, கஞ்சா கருப்பு, பிரகாஷ்ராஜ், மோகன், மயில்சாமி, சிபி, அருண் பாண்டியன், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, விசு, ஆனந்த்ராஜ், பொன்வண்ணன், பார்த்திபன், சார்லி, சின்னி ஜெயந்த், மன்சூரலிகான், சுந்தர்.சி., பாண்டியராஜன், பிருத்விராஜன், சாந்தனு, கே.பாக்யராஜ், நாசர், ராம்கி, கிங்காங், பப்லு, பிறைசூடன், விச்சு, கிருபா மாஸ்டர், ஆர்.சுந்தர்ராஜன், ஜாக்குவார் தங்கம், ஆதி, எபி குஞ்சுமோன், டி.சிவா, ஆதித்யா, ரகுமான், சந்தானம், சாம்ஸ், போஸ் வெங்கட், நகுல், எஸ்.ஜே.சூர்யா, விஜய் ஆண்டனி, உதயநிதி, வைபவ், மதுசூதனன், பிரசன்னா, ஆர்.ஜே.பாலாஜி, விஜய் வசந்த், ஏ.எல்.அழகப்பன், மேஜர் கெளதம், சூரி, ராமராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், சுபாஷ் சந்திரபோஸ், அஸ்வின், அபி சரவணன், பால சரவணன், ஆதவ் கண்ணதாசன், லுப்தீன் பாஷா, ஜி.வி.பிரகாஷ்குமார், அருண்மொழி காமராஜ், ‘மிர்ச்சி’ சிவா, ஜெ.பி.தியாகராஜன், கிருஷ்ணா, சிரிஷ், தம்பி ராமையா, அசோக் செல்வன், ராம்கி, ராஜ்கிரண், ஆதி, நரேன், ஜெகன், பொன்னம்பலம், கணேஷ், செல் முருகன், கிரிஷ் மற்றும் பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்தவர்களும் வாக்களித்தனர்.

நடிகைகள் : வைஜெயந்திமாலா, கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி, சச்சு, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா, லதா, ராஜஸ்ரீ, கே.ஆர்.வத்சலா, எம்.என்.ராஜம், ஊர்வசி, கலா ரஞ்சனி, கோவை சரளா, ராகசுதா, ‘பசி’ சத்யா, விந்தியா, சஞ்சனா சிங், ராதா, அம்பிகா, சீமா, நளினி, லலிதகுமாரி, வடிவுக்கரசி, ரோகிணி, ஷீலா, பூர்ணிமா பாக்யராஜ், ரஞ்சனி, ஐஸ்வர்யா, சாந்தி வில்லியம்ஸ், எலிசபெத் சூரஜ், சித்ரா, நித்யா, ஜெயபாரதி, பிரபா, சுஹாசினி, மீனா, நீலிமா ராணி, வசுந்த்ரா, கார்த்திகா, வாமன் மாலினி, மாலினி, சத்யப்பிரியா, லலிதா, சங்கீதா கிரிஷ், வித்யா பிரதீப், சரண்யா பாக்யராஜ், நித்யா, ரேகா, சோனா, சினேகா, ரித்விகா, ஷகிலா, அனுராதா, ஜெயமாலினி, அபிநயா, நிக்கி கல்ராணி, அஸ்மிதா, மும்தாஜ், காயத்ரி ரகுராம், ஜனனி ஐயர், சபீதா ஆனந்த், நிரோஷா, யுவஸ்ரீ, சுஜா வாருணி, ஆர்த்தி கணேஷ் மற்றும் பலர் வாக்களித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் ஏ.ஆர்.முருகதாஸின் படப்பிடிப்பில் இருப்பதால் தபால் வாக்கினை பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கான தபால் வாக்கு நேற்று மாலை 6.45 மணிக்குத்தான் அவருக்குக் கிடைத்ததால் அவரால் வாக்களிக்க முடியவில்லை.

நடிகர் மோகனின் வாக்கினை வேறு யாரோ ஒருவர் செலுத்திவிட்டதால் மோகன் தனக்கான பதிலி வாக்கினை செலுத்தினார். கடந்த தேர்தலின்போதும் இதே மோகனின் வாக்கினை வேறு ஒருவர் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கொல்லங்குடி கருப்பாயி சொந்த ஊரில் இருந்து ஆர்வமாக ஓட்டளிக்க சென்னைக்கு வந்திருந்தார். இங்கு வந்த பிறகு அவருக்கு ஓட்டு இல்லை என்று சொல்லப்பட்டதால் மிகுந்த ஏமாற்றமடைந்தார். இரண்டு அணியினரும் அவரை வாக்களிக்க வரும்படி செல்போனில் செய்தியனுப்பியிருக்கிறார்கள். ஆனால் வந்த பின்பு வாக்களிக்கும் தகுதியில்லை என்று சொன்னது எந்த வகையில் நியாயம் என்று கொல்லங்குடி கருப்பாயி தரப்பில் கேட்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையின் லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டன.

வாக்குகளை எண்ணுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் இரண்டு வாரங்கள் கழித்து நடக்கவிருக்கும் விசாரணையின் முடிவில்தான் வாக்கு எண்ணிக்கை எப்போது நடைபெறும் என்பது தெரிய வரும்.

Our Score