சி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..!

சி.ஐ.ஏ. உளவாளியாக நடிக்கவிருக்கும் ஸ்ருதி ஹாசன்..!

USA Media Network நிறுவனம் தயாரிக்கவிருக்கும் ‘டிரெட் ஸ்டோன்’ என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இதன் மூலம் USA மீடியா நெட்வொர்க் நிறுவனத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை நடிகை ஸ்ருதி ஹாசன் பெற்றுள்ளார்.

இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA-வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் ‘பிளாக் ஆப்ஸ் புரோக்ராம்’ ஆன ‘டிரெட் ஸ்டோனை’ மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

shruthi hasan-2

‘டிரெட் ஸ்டோன்’னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய கொலையாளிகளாக, திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவார்கள்.

இந்தத் தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி ஹாசன், ‘நீரா பட்டேல்’ என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக சி.ஐ.ஏ. உளவாளியாக உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் ஹெரோஸ்ஸை உருவாக்கிய டிம் கிரிங் என்பவரால் எழுதப்பட்டதாகும். இத்தொடரில் பிரபல ஹாலிவுட் நடிகர்களான ஜெரிமி ஐர்வின்‌, பிரயன் ஸிமித் ஒமார் மெட்வாலி மற்றும் டிரேஸி இபிஈயகார்ரும் நடிக்கின்றனர்.

ஸ்ருதி ஹாசன் நடிப்பு மட்டும் இல்லாமல் உலக அளவில் இசையிலும் தனது அழுத்தமான பதிவை பதிவு செய்யும் அசாத்திய கலைஞராக   இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் இசைக்குப் பெயர் பெற்ற பல மேடைகளிலும், அரங்குகளிலும் அவர் பாடியுள்ளார். தற்போது அவருடைய முதல் இசை ஆல்பத்தை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறார். மேலும் ஸ்ருதி ஹாசன் தற்போது  ‘லாபம்’ என்கிற தமிழ்ப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
error: Content is protected !!