பேய் ஹீரோவாக நடிக்கும் ‘செண்பககோட்டை’ திரைப்படம்

பேய் ஹீரோவாக நடிக்கும் ‘செண்பககோட்டை’ திரைப்படம்

இந்தாண்டு மே மாதம் மலையாளத்தில் வெளியான 'ஆடு புலி ஆட்டம்' திரைப்படம் நடிகர் ஜெயராமின் நடிப்பு கேரியரிலேயே மிக அதிக வசூலாக 21 நாட்களில் 7 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

இதே படம் இப்போது தமிழில் ‘செண்பக கோட்டை’ என்ற பெயரில்,  மிக விரைவில் வெளியாகவுள்ளது.

_mg_1471

இந்தப் படத்தில் ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஓம்பூரி, சம்பத், ‘ஆடுகளம்’ நரேன், ஷீலு ஆபிரஹாம், பேபி அக்சரா கிஷோர், பேபி அஞ்சலீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜித்து தாமோதர், இசை – ரித்தீஸ் வேகா, கலை இயக்கம் – சஹாஸ் பாலா, படத் தொகுப்பு – எஸ்.என்.பாஸில், சந்தீப் நந்தகுமார், டிசைன்ஸ் – அஞ்சலி முருகன், கதை, திரைக்கதை, வசனம் – தினேஷ் பல்லா, தயாரிப்பு – ஹர்சினி மூவிஸ், இயக்கம் – கண்ணன் தமராக்குளம். 

இயக்குநர் கண்ணன் தமராக்குளம், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இவர் மலையாளத்தில் ஏற்கெனவே இயக்கிய ‘திங்கள் முதல் வெள்ளிவரை’ படமும் ஹிட்டுதானாம்.

இதன் தமிழ் வெர்ஷனுக்கு தமிழ்த் திரையுலகின் மூத்த பி.ஆர்.ஓ.வும், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என்று பல முகங்கள் கொண்ட சித்ரா லட்சமணன் வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

img_2526

இந்தப் படம் பற்றி பேசிய இயக்குநர் கண்ணன் தமராக்குளம்.  "இந்தப் படத்தை தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஆரம்பித்தோம். மலையாளத்தில் முடித்து படத்தை வெளியிட்டுவிட்டோம். ஆனால் தமிழில் கூடுதலாக சில காட்சிகளை படமாக்க வேண்டியிருந்ததால், கொஞ்சம் லேட்டாகிவிட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு நடக்கும் ஒரு வரலாற்றுக் கதை.. இருபதாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை, இப்போது நிகழும் கதை… இப்படி மூன்று கதைகளை உள்ளடக்கியது இந்தப் படம். 

இந்தப் படத்திலும் பேய் உண்டு. ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் வழக்கமான சினிமா பேய் அல்ல. பொதுவாக இப்போதைய பேய் படங்களில் அட்டகாசம் செய்யும் பேயை யார் அடக்கப் போகிறார்கள் என்பதுதான் திரைக்கதையாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள், படத்தில் வரும் பேய் நிச்சயம் ஜெயித்தாக வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு ரசிகனுக்கு நெருக்கமான வகையில் பேயின் கேரக்டர் ஸ்கெட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயராமை இதுவரையிலும் ஹீரோவாக பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்தப் படத்தில் வில்லன் என்ற வார்த்தையைவிடவும் கொடுமையான ஒரு கேரக்டரில் பார்க்கப் போகிறீர்கள். 

ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் காதல் போர்ஷன் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். மிக, மிக நாகரிகமானதாக இருக்கும். இந்தக் கால இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில்தான் அவர்களுடைய லவ் டிராக் இருக்கும்.

பல தேசிய விருதுகளை பெற்றிருக்கும் பாலிவுட் நடிகர் ஓம்பூரி இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். பேபி அக்ஷரா கிஷோர், பேபி அஞ்சலீனா இருவரும் படத்தையே தாங்கிப் பிடிக்கும் அளவுக்கான முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது..." என்றார்.