full screen background image

‘கலக்கப் போவது யாரு’ இயக்குநர் ராஜ்குமார் இயக்கும் ‘செயலி’ திரைப்படம்

‘கலக்கப் போவது யாரு’ இயக்குநர் ராஜ்குமார் இயக்கும் ‘செயலி’ திரைப்படம்

OCEANAA AJR CINE ARTS PRIVATE LIMITED நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘செயலி’.

இந்தப் படத்தில் தம்பி ராமையா, V.T.V.கணேஷ், சிங்கம் புலி, ரோபோ ஷங்கர், மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன், பிரேம், இனியா, தேவதர்ஷிணி, இவர்களுடன் 5 பள்ளி குழந்தைகளும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – U.K.செந்தில்குமார், இசை – L.V. முத்து கணேஷ், பாடல்கள் – பா. விஜய், படத் தொகுப்பு – ஆண்டனி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜ்குமார்.

‘கலக்க போவது யாரு’, ‘அசத்த போவது யாரு’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கிய சின்னத்திரை இயக்குநர் ராஜ்குமார், இந்தப் படத்தை இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.

காமெடி கலந்த திரில்லர் டைப் படமான இந்த ‘செயலி’ திரைப்படம், இன்று காலை GK VISION TIME படப்பிடிப்பு அரங்கில் மூத்தப் பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபால் அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.

seyali-movie-poojai-stills-5 seyali-movie-poojai-stills-4 seyali-movie-poojai-stills-3 seyali-movie-poojai-stills-2 seyali-movie-poojai-stills-1

Our Score