புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் ‘செயல்’ 

புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் ‘செயல்’ 

C.R. கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்  ‘செயல்.’

இந்தப் படத்தில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், தீனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகியிருக்கிறார். 

ஒளிப்பதிவு – V.இளையராஜா,  இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், நடனம் – பாபா பாஸ்கர், ஜானி, கலை – ஜான் பிரிட்டோ, தயாரிப்பு நிர்வாகம் – ஏ.பி.ரவி, தயாரிப்பு – C.R.ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் ரவி அப்புலு பேசும்போது, “இந்தப் படத்திற்காக கேரளாவில் நடன இயக்குநர் பாபா பாஸ்கரின் நடன அமைப்பில் ‘நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா’ என்ற பாடல் காட்சியில் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி இருவரும் பங்கு பெற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சாலக்குடி, வாகமன் போன்ற அடர்ந்த காடுகளில் மிகவும் சிரமப்பட்டு இந்த பாடல் காட்சியை படமாக்கினோம்.

சென்னையில் ‘டே மாமா விட்டுத் தள்ளு..  இதுக்கேண்டா இவ்வளவு டல்லு’ என்ற பாடல் காட்சி, முழுக்க முழுக்க சென்னையை பற்றிய பாடலான இதில் ராஜன் தேஜேஸ்வர் மற்றும் அவரது நண்பரான ஆதித்யா கோபி மற்றைய நண்பர்கள் பங்கு பெற பாபா பாஸ்கரின் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. படம் விரைவில் வெளியாக உள்ளது…” என்றார்.