திரைப்படங்களின் தயாரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேச்சு…!

திரைப்படங்களின் தயாரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேச்சு…!

‘பசங்க புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘செம’.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாகவும், அர்த்தனா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ளார்.

நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

DCIM (79)

காமெடி நடிகர்களான சதீஷ் மற்றும் சூரி இருவரும் விழாவின் ஒரு பகுதியை தொகுத்து வழங்கினர். விழாவில் திரையிட்ட படத்தின் டிரெயிலரும், இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

soori-sathish

விழாவில் நடிகர் சூரி பேசும்போது, "வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் என் வீட்டுக்கு வருமான வரி சோதனைக்கு வரப் போவதாகச் சொன்னார். ஏன் என கேட்டதற்கு, நிறைய படங்கள்ல நடிக்கிறீங்களே என்றார். அதுக்கு, இப்போது என்னைவிட ஜி.வி.பிரகாஷ்தான் அதிக படத்தில் நடிக்கிறார், அவரை விட்டுட்டீங்களே என்றேன். நிறைய படங்கள் நடித்தாலும் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்..." என்றார்.

நடிகர் மன்சூரலிகான் பேசும்போது, "இயக்குநர் வள்ளிகாந்த் ஒரு காட்சிக்கு 40 டேக்வரை பொறுமையாக எடுப்பார். டப்பிங்கிலும் சரி, ஷூட்டிங்கிலும் சரி அவரை திருப்திப்படுத்தவே முடியாது. பாண்டிராஜ் பட்டறையில் இருந்து நிறைய இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். அப்படி இந்த வள்ளிகாந்தும் நல்ல இயக்குநராக வருவார்.

காட்டுக்குள் ஆஸ்ரமம் கட்ட ஆரம்பித்த பிறகு, யானைகள் ஊருக்குள் வந்து விட்டன. சிங்கம், புலி, எல்லாம் ஊருக்குள் வரும். அதை வீட்டுக்கு ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என சட்டம் போட்டாலும் போடுவார்கள். யூடியூபில் சில விமர்சகர்கள் கண்டமேனிக்கு விமர்சிக்கிறார்கள். அதை தரமான முறையில் செய்ய வேண்டும்..." என தன் ஆதங்கத்தை பேச்சில் வெளிப்படுத்திவிட்டு போனார்.

parthiban

வித்தியாச இயக்குநர் பார்த்திபன் பேசும்போது, "ஜி.வி. என்றால் கேர்ள்ஸ் வியூ.. பெண்களின் பார்வை ஜிவி பிரகாஷ் மீது பிரகாசமாக வீசுகிறது. சம்சாரிக்கும், சன்யாசிக்கும் வித்தியாசம் என்னவென்றால் சன்யாசி புலித் தோல் மீது தூங்குவான், சம்சாரி புலியுடனே தூங்குபவன். அப்படி புலியுடன் தூங்குபவர்தான் ஜி.வி.பிரகாஷ். இங்கே படத்தின் நாயகி, ஜி.வி.யை பற்றி பேசும்போது அவரது மனைவியின் பார்வை அப்படித்தான் இருந்தது.

இந்தக் காலத்தில் கமர்சியல் படம் எடுப்பதே கஷ்டம், அதிலும் முதல் படமே கமர்சியல் படமாக கொடுப்பது ரொம்ப பெரிய விஷயம், அவர்களின் உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்..." என்றார்.

IMG_5006

இசையை வெளியிட்டு பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, "வாரத்துக்கு 3 படங்களை ரிலீஸ் செய்தால்கூட வருடத்திற்கு 150 படங்கள்தான் ரிலீஸ் செய்ய முடியும். ஆனால் இப்போது ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. முதலில் இப்படி அதிகமான படங்களின் உருவாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். அல்லது வாரத்துக்கு 3 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்தாக வேண்டும்.

கேபிள் டிவி ஒளிபரப்பையும், படங்களின் ரிலீஸ் தேதிகளை ஒழுங்குபடுத்தும் வேலைகளை தயாரிப்பாளர் சங்கம் செய்து வருகிறது..." என்றார்.

கார்த்தி நடிக்க, தான் தயாரிக்கும் அடுத்த படத்தை பாண்டிராஜ் இயக்குவார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு விட்டு, ‘செம’ படக் குழுவினரை வாழ்த்தி பேசினார் 2-டி நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன்.

pandiraj

தயாரிப்பாளரும், இயக்குநருமான பாண்டிராஜ் பேசும்போது, "என் உதவியாளன் வள்ளிகாந்த் எந்த ஒரு விஷயத்தையும் முகத்துக்கு நேரே சொல்லுபவன், அதுதான் அவனை என் உதவியாளராக நான் சேர்த்துக் கொள்ள முக்கிய காரணம்.

என்னிடம் நிறைய திட்டு வாங்கிய உதவி இயக்குநரும் அவன்தான். அவனுக்கு என்ன செய்வது என யோசித்துதான் இந்த படத்தை தயாரித்தேன். ஒரு படம் எடுப்பதே ரொம்ப கஷ்டமான விஷயம். ஒரே நேரத்தில் ஜி.வி. 12 படங்களில் நடிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஜி.வி.யை வைத்து விரைவில் படம் இயக்குவேன்.." என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.

படத்தின் நாயகி அர்த்தனா பினு, மைம் கோபி, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன், தனஞ்செயன், ராஜசேகர் பாண்டியன், இயக்குநர்கள் வசந்தபாலன், பொன்ராம், பிரஷாந்த் பாண்டிராஜ், ராமு செல்லப்பா, கார்த்திக் ராஜு, ஜெகன்நாத், ராமகிருஷ்ணன், வள்ளிகாந்த் ஆகியோரும் பேசினார்கள்.