விஜய் சேதுபதியின் 25-வது படம் ‘சீதக்காதி’..!

விஜய் சேதுபதியின் 25-வது படம் ‘சீதக்காதி’..!

ஆக்சன் கிங் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரத்திலும், பிரசன்னா, வரலக்ஷ்மி, ஸ்ருதி ஹரிஹரன், சுமன், சுஹாசினி ஆகியோர் நடித்து வரும் ‘நிபுணன்’ படத்தை அடுத்து Passion Film Factory நிறுவனம் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இது இவருக்கு 25-வது படமாகும். படத்திற்கு ‘சீதக்காதி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சரஸ்காந்த், இசை – கோவிந்த் மேனன், படத் தொகுப்பு – ஆர்.கோவிந்தராஜ், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், டிஸைனர் – கோபி பிரசன்னா, தயாரிப்பு – சுதன், உமேஷ், ஜெயராம், அருண் வைத்தியநாதன், எழுத்து, இயக்கம் – பாலாஜி தரணிதரன்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹீரோ விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி, நடிகை அர்ச்சனா, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் பாலாஜி தரணிதரன், மேலும் படத்தில் பங்கு பெறும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.




error: Content is protected !!