விக்ராந்த், விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்கும் ‘சீமத்தண்ணி’ திரைப்படம்

விக்ராந்த், விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்கும் ‘சீமத்தண்ணி’ திரைப்படம்

கிரேட் எம்பரர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சி.பிரேம்குமார் தயாரிக்கும் புதிய படம் ‘சீமத்தண்ணி.’

இந்தப் படத்தில் விதார்த், விஜய் வசந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..

ஒளிப்பதிவு – மாசானி, இசை – திருமூர்த்தி, படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார், சண்டை பயிற்சி – நாதன் லீ, கலை – விஜயராஜன், நடனம் – தினேஷ், ஜாய் மதி, உடைகள் – நடராஜன், பாடல்கள் – நந்தலாலா, சீர்காழீ சிற்பி, மோகன்ராஜ், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – விஜய் K.செல்லையா, தயாரிப்பு – சி.பிரேம்குமார், கதை,  திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய்மோகன்.

பல முன்னணி இயக்குநர்களிடம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் துணை, இணை இயக்குநராக பணியாற்றிய விஜய்மோகன், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

ரேஷன் கடையையே தாய் வீடாக நினைத்து வாழும் 2 அநாதை நண்பர்களுக்கும், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் ‘தங்கமாரி’ எனும் கதாபாத்திரத்திற்கும் இடையில் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் யதார்த்தமாகவும், ரசிக்கும்படியும் உருவாக்கி வருகிறது ‘சீமத்தண்ணி.’ 

இன்று நடைபெற்ற படத்தின் துவக்க விழாவில் படப்பிடிப்பினை இயக்குநர் A.சற்குணம் கிளாப்  அடித்து துவக்கி வைத்தார்.
error: Content is protected !!