5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்

5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்

Darkroom Creations நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘செகண்ட் ஷோ’.

இந்தப் படத்தில் ‘அஞ்சாதே’, ‘கோ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருடன் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – L.K.விஜய், படத் தொகுப்பு – ரங்கிஸ், பாடல்கள் – பா.விஜய், நடன இயக்கம் – சூரஜ் நந்தா, மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).

சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

முழுக்க, முழுக்க லண்டனில் படமாக்கப்படவுள்ள இப்படம், பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகிறது.