இந்தியாவின் கல்வித் துறை மாற்றம் பற்றிப் பேச வரும் ‘ஸ்கூல் கேம்பஸ்’ திரைப்படம்..!

இந்தியாவின் கல்வித் துறை மாற்றம் பற்றிப் பேச வரும் ‘ஸ்கூல் கேம்பஸ்’ திரைப்படம்..!

A.M.N. குளோபல் குரூப் குழுமம், தற்போது A.M.N. FINE ARTS  என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக ‘ஸ்கூல் கேம்பஸ்’ என்கிற தமிழ்த் திரைப்படத்தினை தயாரித்து வருகிறது.

ஏ.எம்.என். குளோபல் குரூப்பின் நிர்வாக இயக்குநரான DR.R.J. ராம நாராயணா இந்த படத்தினை இயக்கி, தயாரிப்பது மட்டுமில்லாமல் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் பேரனும், சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த் பாபு   அவர்களின் மகனான  கஜேஷ் நாகேஷ் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ராஜ் கமல் நடிக்கிறார். கீர்த்தி மற்றும் காயத்ரி இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் ‘கலைமாமணி’ டெல்லி கணேஷ், மதன் பாப், ரிந்து ரவி மற்றும் ராதிகா மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக  அருள் வின்சென்ட் மற்றும் படத் தொகுப்பாளராக ராஜேஷ் குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். ‘தேனிசை தென்றல்’ தேவா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும் பிரபல பாடகர்களான ஆஷா போஷ்லே , தென்னிந்திய கான சரஸ்வதி P.சுசீலா மற்றும் S.P.பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்த படத்தில் பாடல்களை பாடியுள்ளனர்.

நடன இயக்கம் – ராதிகா, கலை இயக்கம் – செந்தில் ராகவன், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், இணை இயக்கம் – கீர்த்திவாசன், தயாரிப்பு மேலாளர்கள் – வி.கே.துரை, நஸ்ரூல்லா ஷெரீப், பாரதிதாசன், மக்கள் தொடர்பு – ரியாஸ் அஹ்மத், திரைக்கதை, வசனம் – வி.கே.அமிர்தராஜா, கதை, தயாரிப்பு, இயக்கம் – டாக்டர்  ஆர்.ஜெ.ராம நாராயணா.

“இந்தியாவில் கல்வித் துறையில் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைச் சொல்லும் கதையாக இப்படம் அமைந்துள்ளது. இந்திய கல்வி முறைக்கும் வெளிநாட்டு கல்வி முறைக்கும் உள்ள வேறுபாடுகளை உள்ளடக்கிய படமாக இந்த ‘ஸ்கூல் கேம்பஸ்’ திரைப்படம் அமையும்…” என்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தின் முதல் நாள்  படப்பிடிப்பினை மாவட்ட ஆட்சியர்  ஸ்ரீசந்தோஷ்குமார் மால் டெல்லி கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

அந்தமான் நிக்கோபார் மற்றும் ஹேவ்லாக் தீவுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு  காட்சிகள்  நடைபெற்று வருகின்றன.

மின்னல் வேகத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.