full screen background image

இனியா பயமுறுத்தும் திகில் படம் ‘சதுரஅடி 3500’

இனியா பயமுறுத்தும் திகில் படம் ‘சதுரஅடி 3500’

RIGHT VIEW CINEMAS நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘சதுர அடி 3500’.

இந்தப் படத்தில் ஹீரோவாக புதுமுகம் நிகில் மோகனும், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘ஐஸ்கிரீம்’ படம் மூலம் அறிமுகமான நடிகை ஸ்வாதி தீக்ஷித்தும் நடித்துள்ளனர்.

மேலும், இனியா, ரகுமான் ஆகியோருடன், நடிகர்கள் பிரதாப் போத்தன், சரவணன் சுப்பைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, மனோபாலா, தலைவாசல் விஜய், தயா பெலிக்ஸ், ஆகாஷ்  ஆகியோரும் நடித்துள்ளனர்.

மக்கள் தொடர்பு – யுவராஜ், டிசைன்ஸ் – சபீர், சண்டை காட்சிகள் – தளபதி தினேஷ், நடனம் – ஸ்ரீதர், கலை – ஜனார்த்தனன், பாடகர்கள் – நரேஷ் ஐயர், ஹரிச்சரண், ரீட்டா, சத்யன், பாடல்கள் – அமரர் நா.முத்துக்குமார், இசை – கணேஷ் ராகவேந்திரா, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், ஒளிப்பதிவு – அமரர் ஆனந்த குட்டன் மற்றும் ஐ. பிரான்ஸிஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஸ்டீபன், தயாரிப்பு – ஜெய்சன் பழையாட்டு மற்றும் என்.ஆர்.எம்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர்  ஸ்டீபன், “உண்மையிலேயே சென்னையில் நடைபெற்ற ஒரு திகில் சம்பவத்தை மையப்படுத்திதான் இப்படம் உருவாகியுள்ளது.

நடிகை இனியா படத்தின் கதையை கேட்ட உடனேயே இதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். மேலும், இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரகுமானிடம் கேட்டோம். தன்னுடைய கேரக்டர் இதுவரை திரைக்கு வந்த பேய்த் திரைப்படங்களின் கதையமைப்பிலிருந்து மாறுபட்டு இருப்பதாக பாராட்டியதுடன், அவரும் ஆர்வத்துடன் இப்படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

‘காதலுக்கு மரியாதை’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘ப்ரெண்ட்ஸ்’ என தொடர்ந்து முன்னணி இயக்குனர் பாசிலின் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் பணியாற்றிய மறைந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த குட்டனின் ஒளிப்பதிவில் இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல், ஊட்டி, பெங்களூர் மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு பாடல் காட்சி மட்டும் சிங்கப்பூரில் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

எத்தனை பேய்த் திரைப்படங்கள் வந்தாலும் அத்தனைக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் தொடர்ந்து அளித்து வரும் அமோக ஆதரவே இப்படம் உருவாக காரணம். இப்படத்தில் திகிலுடன் காதலையும் புதிய கோணத்தில் திரைக்கதையாக்கி இருக்கதிறோம்.. அனைத்து பாடல் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்..” என்றார் நம்பிக்கையுடன்.

Our Score