‘சர்வர் சுந்தரம்’ படத்தின் கிளைமாக்ஸ் துபாயில் படமாகிறது..!

‘சர்வர் சுந்தரம்’ படத்தின் கிளைமாக்ஸ் துபாயில் படமாகிறது..!

‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக துபாய் சென்றுள்ளனர் சந்தானம் மற்றும் படக் குழுவினர்.

தரமான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து  ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘கெனன்யா பிலிம்ஸ்’ – ஜெ செல்வக்குமார்  தயாரித்து வரும்  ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடிகர் சந்தானமும், மராத்திய நடிகை வைபவி ஷந்திலியாவும் முன்னணி கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். ஆனந்த் பால்கி இயக்கி வருகிறார்.

‘தில்லுக்கு துட்டு’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு, ஒரு கமர்ஷியல் ஹீரோவாக தன்னுடைய வெற்றி பயணத்தை இந்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் மூலமும் தொடர இருக்கிறார் சந்தானம்.

சென்னை, கோவா மற்றும் தென்காசியில்  முக்கிய காட்சிகளை படமாக்கிய ‘சர்வர் சுந்தரம்’ படக் குழுவினர், தற்போது கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்காக துபாயில் தரை இறங்கி இருக்கின்றனர். பன்னிரெண்டு நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில், ஒரு பாடல், கிளைமாக்ஸ் மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.




error: Content is protected !!