இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன்  வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன்  போஸ்டர்..!

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன்  வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன்  போஸ்டர்..!

ஸ்ரீகுரு சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.சி.திம்மா ரெட்டி  தயாரித்துள்ள திரைப்படம் ‘சந்தோஷத்தில் கலவரம்.’

இந்தப் படத்தில் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல்.சி.. கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என  புதுமுகங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ரவி மரியா வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்திற்கு பவுலியஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவருடன் மற்றொரு ஒளிப்பதிவாளரான ஷிரவன் குமாரும்  இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை – சிவ நக், பாடல்கள் –கபிலன், மணி அமுதன், ப்ரியன், படத் தொகுப்பு – கிராந்தி குமார். ஒலிப்பதிவு – அருண் வர்மா. இவர் ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் மாணவர். 

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கிராந்தி பிரசாத்  இயக்குகிறார். இவர் பல விளம்பரப் படங்கள் மற்றும் குறும் படங்களை இபக்கியவர்.  தெலுங்கில் சில இயக்குநர்களிடம் திரைப் பாடம் பயின்றவர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்  வெளியிட்டார். வெளியிட்ட பிறகு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

படம் பற்றிப் பேசிய இயக்குநர் கிராந்தி பிரசாத், “இது ஒரு  சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்..? என்பதுதான் படத்தின் கதை. அதனால்தான் ‘தீமைக்கும் நன்மைக்கும்  இடையில் நடக்கும் மோதல் ‘ என்று  டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம். 

எஸ்.ஏ.சி. ஸார் துணிச்சலான பெரும் புகழ் பெற்ற இயக்குநர். அவர் எங்களை வாழ்த்தியது… ஆசீர்வதித்தது எங்கள் படக் குழுவிற்கே பெரும் பலம் கிடைத்த உணர்வைத் தருகிறது…” என்கிறார்.