‘சங்கிலி புங்கிலி கதவை தொற’ படத்துக்கு ‘U / A’ சான்றிதழ்

‘சங்கிலி புங்கிலி கதவை தொற’ படத்துக்கு ‘U / A’ சான்றிதழ்

இயக்குநர் அட்லீயின் A for apple நிறுவனம்  fox star ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவை தொற’ படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘U/A’ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இந்தப் படத்தில் ஜீவா ஹீரோவாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இது பற்றி பேசிய இயக்குநர் ஐக், “கோடை கால விடுமுறையில் ரசிகர்களுக்கு ஏற்ற விருந்தாக ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ இருக்கும். வர்த்தக ரீதியான விஷயங்களை கோர்வையாக்கி ரசிகர்களுக்கும், திரை வர்த்தகத்தினருக்கும் மிக சிறந்த படமாக வழங்கி இருக்கிறோம்.  படம் பார்க்கும்போது ரசிகர்கள் அச்சப்பட்டும், அதே சமயம் தீவிர  நகைச்சுவை தாக்குதலுக்கும் உள்ளாவார்கள் என்பது உறுதி..” என்று உறுதியாக கூறினார் இயக்குநர் ஐக்.

இந்தப் படம் வரும் மே 19-ம் தேதியன்று திரைக்கு வருகிறது..!




error: Content is protected !!