“சண்டக்கோழி-2’ படம் ‘காட்பாதரை’ போல் வந்துள்ளது” – நடிகர் விஷால் பேச்சு..!

“சண்டக்கோழி-2’ படம் ‘காட்பாதரை’ போல் வந்துள்ளது” – நடிகர் விஷால் பேச்சு..!

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷால் தயாரித்து நடித்துள்ள ‘சண்டக்கோழி-2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் நாயகன் விஷால், நாயகி கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீன், கவிஞர்கள் அறிவுமதி, பிருந்தா சாரதி, ஏகாதசி, அருண் பாரதி, நடிகர்கள் தென்னவன், மாரிமுத்து, ஜோ மல்லூரி, சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது, “25 படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

7H7A4662 (Small)

இந்தப் படத்தை முதலில் என்னிடம் சொன்னது தயாரிப்பாளர் பிரவீன்தான். நான் இயக்குநராக வர வேண்டும் என நினைத்தேன். என்னை ஹீரோவாக மாற்றிய அனைவருக்கும் நன்றி.

‘சண்டக்கோழி-1’ எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல. அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்தக் கதையைப் பற்றி கேள்விப்பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட கால நண்பர் என்கிற உரிமையில் ‘அந்தப் படத்தில் நான் நடிக்கின்றேன்’ என்று கூறினேன். அப்போது ‘செல்லமே’ படம்கூட வெளிவரவில்லை.

‘சண்டக்கோழி’யில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார். அங்கே தொடங்கியதுதான் என் தமிழ்த் திரையுலக வாழ்க்கை. கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது.

actor vishal

‘தாவணி போட்ட தீபாவளி’ பாடல் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. பிற மாநிலங்களிலும் இந்தப் படத்தை ‘பந்தைய கோழி’ என்று பெயர் வைத்து வெளியிட்டார்கள். அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட்.

லிங்குசாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம். என் அப்பா நினைத்திருந்தால் அந்தப் படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம். ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார். அங்கு முதல் இரண்டு வாரத்திற்கு கூட்டமே இல்லை. ஆனால், மூன்றாவது வாரத்திலிருந்து ரசிகர்கள் அலை மோத ஆரம்பித்தனர்.

அன்றைக்கு ஆரம்பித்து முதல் படம் முடித்து இதோ இப்போது 25-வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன். அதுவும் அதே ‘சண்டக்கோழி’யே எனக்கு 25-வது படமாகவும் அமைவதுதான் எனக்கு பெரிய சாதனையாக தோன்றுகிறது.

கீர்த்தி நடித்த படங்களை பார்த்து இருக்கிறேன். அவருடைய ‘மகாநதி’ பார்த்தேன். அதை பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறினேன். இந்தப் படத்தில் அவருடன் நடித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் எழுத்தாளர். நான் படம் இயக்குவேனோ இல்லையோ… கட்டாயம் கீர்த்தி சுரேஷ் இயக்குநராக வலம் வருவார்.

என் வீட்டில் எங்க அப்பாவை எப்படி பார்த்தேனோ அதே போல் செட்டில் ராஜ்கிரண் சாரை பார்த்தேன். லிங்குசாமி என்னிடம் இரண்டாம் பாகத்தில் சக்திதான் கேமராமேன் சரியா என்று கேட்டார். உனக்கு யாரை தோனுகிறதோ அவர்களை வைத்துக் கொள் என்றேன். சக்தி மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. அதைவிட இரண்டு மடங்கு வேலை செய்துள்ளார். அனல் அரசு மாஸ்டர் மூலமாக என் உடலில் 100 தையல் வந்துவிட்டது.

rajkiran

பிரபு சாருடனோ, ராஜ்கிரண் சாருடனோ நடிக்கும்போதும் பாலா சார் இயக்கத்தில் நடிக்கும்போதும் அவ்வப்போது என்னை நானே கிள்ளி பார்ப்பேன்.

‘சண்டக்கோழி—2’, ‘பந்தயக்கோழி-2’  இரண்டுமே வரும் அக்டோபர்-18-ம் தேதியன்று வெளிவரவுள்ளது. அதுவும் ஆயுத பூஜை அன்று. பெரிய அளவில் வெளிவரவுள்ளது. 2000 பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று வெளிவரும்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து படம் வெளிவந்து மூன்று நாட்கள் கழித்து விமர்சனம்  எழுதினால்  சிறிய, பெரிய படங்களுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும்…” என்று கேட்டுக் கொண்டார் விஷால்.

lingusamy

இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “இந்த ‘சண்டக்கோழி’ பட முதல் பாகத்தின் தயாரிப்பாளர் விக்கிக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நேற்று விஷால் இந்த படத்தை பார்த்துவிட்டு, ‘இதில் நடித்தவர்கள் எல்லாரும் இப்போதும் அப்படியேதான் உள்ளனர். பதின்மூன்று வருடம் ஆனது போல் தெரியலையே..’ என்றார். எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.

ஜி.கே. பேக்டரியில் நான் உதவி இயக்குநராக இருக்கும்போதே எனக்கு விஷாலை நன்கு தெரியும். அவரை தம்பி, முதலாளி, நண்பா என எப்படி வேண்டுமானாலும் அழைப்பேன். ‘சண்டக்கோழி’ முதல் பாகத்தில் நடித்த விஷாலை இரண்டாம் பாகத்திலும் உணர்ந்தேன். அவர் அந்த இடத்தில் நடிக்கக் கூடியவர். மற்ற இயக்குநர்கள் எப்படி என எனக்கு தெரியாது. ஆனால் நான் உணர்ந்தேன்.

விஷாலை இப்போதும் போன படத்தின் பேஜ் ஒர்க்குக்காக கூப்பிட்டாலும் வந்துவிடுவார். அவருக்குத்தான் எவ்வளவு வேலை..? இரண்டு சங்கங்களிலும் தலைமைப் பொறுப்பு. அதையும் தாண்டி இப்படி மெய்ண்டன் பண்ணுவது மிக பெரிய விஷயம். அது அவருடைய அப்பாவிடம் இருந்து வந்தது. அவரும் எப்போதும் சரியாக இருப்பார்.

DSC_3693 (Small)

முதல் பாகத்தில் அவருக்காக அதிகமாக மெனக்கிடல் செய்தேன். இரண்டாம் பாகத்திலும் விஷால் நன்றாக நடித்துள்ளார். நான் சூர்யா, மாதவன், அஜித் சாருடன் வேலை செய்துள்ளேன். அதன் பின் இவருடன் வேலை செய்யும்பொழுது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் வருவதை உணர்ந்தேன். இனி கதை மட்டுமே அவருக்கு சரியான முறையில் அமையும். எனக்கும் விஷாலும் இது அருமையான படமாக அமையும். அப்படியொரு குழு அமைந்து, அவ்வளவு உழைப்பை போட்டுள்ளோம்.

ஒரு வார்த்தையில் கவிதை சொல்ல வேண்டும் என்றால் அது கீர்த்தி சுரேஷ்தான் கீர்த்தி சுரேஷுடன் வேலை பார்த்தது நடிகையர் திலகம் சாவித்திரியுடன் வேலை பார்த்தது போல இருந்தது.

மீரா ஜாஸ்மீன் கதாபாத்திரம் சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன். அதற்கு கீர்த்திதான் சரியாக இருப்பார் என தோன்றியது. என் கணிப்பை அவர் பொய்யாக்கவில்லை.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையமைத்த இருப்பு திரையும் அவர் தயாரித்த படமும் பெரிய வெற்றியை தந்தது. மதன் கார்கி எழுதிய பாடலுக்கு மூன்று நிமிடத்தில் இசையமைத்து கொடுத்தார்.பாடல் அருமையாக வந்துள்ளது. முத்துக்குமார்.. அவர் இப்போது இல்லை அவருக்கு நிகராக அருண்பாரதி, ஏகாதசி உள்ளனர். பிருந்தா சாரதி சூரியரும் சூரியனும் என்ற பாடலை எழுதியுள்ளார்.

படத் தொகுப்பாளர் பிரவீன் சாருடன் முதல்முறையாக பணியாற்றுகிறேன். அவர்தான் படம் விரைவில் வெளிவர முக்கிய காரணமானவர்.

நான் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. ராஜ்கிரண் சார் அருமையாக நடித்துள்ளார். நடிகர்கள் தென்னவன் சார், சண்முகம் சார் போன்றவர்களெல்லாம் இன்னும் நாலு பாகங்களை எடுத்தாலும் உடன் இருப்பார்கள்.

ஒளிப்பதிவாளர் சக்தி ‘ரன்’ படத்தில் ஜீவா சாரிடம் கடைசி அசிஸ்டெண்ட்டாக வேலை பார்த்தவன். இந்தப் படத்தின் வளர்ச்சி அவரை சேரும். 800 பேர் கூட்டத்திலேயே படம் எடுக்கும்விதமாக இருந்தது. பையா எப்படி காருக்குள்ளையே ஒரு படமோ, அதேபோல் இது ஒரு திருவிழாக்குள்ளேயே ஒரு படம்..” என்றார் இயக்குநர் லிங்குசாமி.

keerthy suresh

படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ் பேசும்போது, “லிங்குசாமி சாருக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கதையைக் கேட்கும்போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன்.  மீரா ஜாஸ்மீன் மேடம் ‘சண்டக்கோழி’ முதல் பாகத்தில் எப்படி நடித்திருந்தார் என்று அனைவருக்குமே தெரியும். அதை நான் எப்படி பண்ண போகிறேன் என்ற பயம் எனக்குள் இருந்தது. அந்த கதாப்பாத்திரத்தைக் கேட்ட பின்பு அதற்கு நிகராகவாது நடிக்க வேண்டும் என தோன்றியது.

‘மகாநதி’ படபிடிப்பின்போது இந்த படம்தான் எனக்கு பெரிய ரிலாக்ஸாக இருந்தது. விஷால், லிங்குசாமி அவர்களுடன் படப்பிடிப்பு ரொம்ப மகிழ்ச்சியை தந்தது. ‘மகாநதி’க்கு பின் நான் மிகவும் விரும்பி நடித்த படம் இந்த ‘சண்டக்கோழி-2’-தான்.

பிருந்தா சார் ஒவ்வொரு வசனத்தையும் அதற்கேற்ற ஏற்ற இறக்கத்துடன் சொல்லிக் கொடுத்தார். யுவனின் இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளது. யுவனுக்கு நன்றி. படத்தில் பாடல்களை எழுதிய அனைத்து பாடலாசிரியர்களுக்கும் நன்றி. படத் தொகுப்பாளர் பிரவீன் சாருக்கும் நன்றி. விஷால் என்ற நண்பர் இந்தப் படத்தின் மூலமாக எனக்குக் கிடைத்துள்ளார் அவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் சக்தி படத்தில் எங்கள் அனைவரையும் மிக அழகாக காட்டியுள்ளார். அவருக்கு மிகப் பெரிய நன்றி…” என்றார்.