full screen background image

“பிங்பேங்ல இருந்து சுடலை.. அந்நியன்ல இருந்துதான் எடுத்தேன்…” – சலீம் இயக்குநரின் பேட்டி..!

“பிங்பேங்ல இருந்து சுடலை.. அந்நியன்ல இருந்துதான் எடுத்தேன்…” – சலீம் இயக்குநரின் பேட்டி..!

படம் நல்லாத்தான் இருக்கு.. இயக்கம் சிறப்பாத்தான் இருக்கு. ஆனா படத்தோட கதையையும், முற்பாதியின் திரைக்கதையையும் கொரியன் படமான ‘பிங்பேங்’-ல இருந்து காப்பி பண்ணியிருக்காங்கன்னு ஊர் முழுக்க பேச்சு இருந்தாலும் அது எதுவுமே தெரியாததுபோல ‘சலீம்’ படத்தின் சக்ஸ்ஸ் பிரஸ்மீட்டுக்கு வந்திருந்தனர் ‘சலீம்’ படத்தின் குழுவினர்.

நாயகன் விஜய் ஆண்டனி, ஹீரோயின், வில்லனாக மிரட்டியிருந்த ஆர்.என்.ஆர்.மனோகர், லொள்ளு சபா சுவாமிநாதன், ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, சந்திரமெளலி என்று அனைவருமே ஆஜராகியிருந்தனர்.

நாயகன், நாயகியைத் தவிர மற்ற அனைவரும் பேசி முடித்தவுடன் கேக் மேடைக்குக் கொண்டு வரப்பட்டு வெட்டப்பட்டது. “இதெல்லாம் எனக்குப் பிடிக்காதுதான்.. இதுக்கும் ஒரு தகுதி வேணும். அது எனக்கு இருக்கான்னும் எனக்குத் தெரியலை. இருந்தாலும் இவங்க சந்தோஷத்துக்காக செய்றேன்..” என்று சொல்லி கேக்கை வெட்டினார் விஜய் ஆண்டனி.

IMG_9822

யாருக்கு முதலில் கொடுப்பது என்று யோசித்தவர்.. சட்டென்று மீடியாக்களை பார்த்து.. “இந்த வெற்றிக்கு முதல் காரணம் நீங்கதான்.. அதுனால உங்கள்ல ஒருத்தருக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன்.. சீன் போடுறதா நினைச்சுக்க வேண்டாம்.. யாராவது வாங்களேன்..” என்றார். ‘தினத்தந்தி’ நிருபர் கங்காதரனை அனைவரும் வற்புறுத்தி மேடைக்கு அனுப்பி வைக்க.. அவருக்கு கேக் கொடுத்து தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் விஜய் ஆண்டனி. கூடவே முன் வரிசையில் இருந்த புகைப்படக்காரர்களுக்கு தன் கையாலேயே கேக்கினை கொடுத்து சந்தோஷப்பட்டார்.

விஜய் ஆண்டனி ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஆளுயர மாலையை அணிவித்தனர். கையில் பிடித்துக் கொள்ள செங்கோலை நீட்ட.. கடைசிவரையிலும் அதனை வாங்க கூச்சப்பட்டு மறுத்துவிட்டார்.  தொடர்ந்து விஜய் ஆண்டனி பேசும்போது, “இதுவரைக்கும் 240 தியேட்டர்கள்ல ‘சலீம்’ ஓடிக்கிட்டிருக்கு. இப்போ உங்களால.. உங்க தயவால.. நீங்க எழுதின எழுத்துக்களால கூடுதலா 60 தியேட்டர்கள் கிடைச்சிருக்கு.. இது எங்களுக்குக் கிடைச்ச அதிர்ஷ்டம்னே சொல்லலாம்..

இந்தப் படத்தை ‘நான் படத்தோட இரண்டாம் பாகம்’ன்னு சொல்றாங்க.. சொல்றவங்க சொல்லிக்கட்டும். இப்போ நான் ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்துல நடிச்சுக்கிட்டிருக்கேன். இன்னும் கொஞ்சம் போர்ஷன் இருக்கு. அது முடிஞ்சு கிறிஸ்துமஸ்ல ரிலீஸாயிரும்.. அதுக்கடுத்து ஒரு படம் இருக்கு. அதற்கும் அடுத்ததா ‘நான்’ படத்தோட மூன்றாம் பாகத்தையும் எடுக்கத்தான் போறேன்..” என்றார்.

IMG_9713

இயக்குநரிடம் கேள்வி கேட்க முனைவதற்குள், நிகழ்ச்சிக்கு மங்களம் பாடிவிட்டதால் இயக்குநரை தனியே சந்தித்து “End Title Card-லாவது கொரியன் படமான Bing Bang படத்திற்கு Credit கொடுத்திருக்கலாமே?” என்று கேட்டோம். பட்டென்று அதை மறுத்தவர் “நான் ‘பிங்பேங்’ல இருந்து எதையும் எடுக்கலங்க.. ‘அந்நியன்’ படத்துல இருந்துதான் எடுத்தேன்.. அந்தக் கதைக் கரு அங்கிருந்து சுட்டதுதான்.. ‘பிங்பேங்’கும் ‘அந்நியனும்’ ஒண்ணுதான்.. யோசிச்சு பாருங்க… என்றார்..”

அப்போ ‘அந்நியன்’ படத்துக்கும், கதாசிரியர் ஷங்கருக்குமாச்சும் கிரெடிட் கொடுத்திருக்கணுமே..? கொடுக்கலையே..?

என்னமோ போங்கப்பா.. நம்ம இயக்குநர்களுக்கு பேசுறதுக்கு சொல்லியா தரணும்..?

Our Score