‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..!

‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..!

ஒரு சிறு டீஸர் மூலமாகவே  இணைய உலகின் கவனத்தை ஈர்த்த படம் ‘சில்லுக் கருப்பட்டி’. இத்திரைப்படத்தின் உரிமையை  தயாரிப்பாளர் சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் (2-D Entertainment) வாங்கியிருப்பது இப்படத்தின் மீது பன்மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Divine Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேஷ் வேலினீனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன். சாரா அர்ஜீன், மணிகண்டன் K, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

SK 21

‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம் நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளை கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிறந்த வெளியீடாக உருவாகியுள்ள சிக்னேச்சர்(Sakthi film factory signature release) நிறுவனத்தின் வெளியீடாக  இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து  தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள  படங்களை  கண்டறிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுபவங்களுக்கு  தங்களது ஆதரவைத் தொடர்ந்து தந்து வருகிறது.

SK 13

அந்த வகையில் மிக நல்ல படமாக  இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தின் மீதான  ஈர்ப்பில் அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளார் 2D Entertainment நிறுவனத்தின் CEO-வான ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிக்னேச்சர் வெளியீடு(Sakthi film factory signature release) என்பது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட, சினிமாவை பெரும் காதலுடன் அணுகும் படங்களை மட்டும், மிக கவனமுடன் தேந்தெடுத்து, பெருமளவு ரசிகர்களுக்கு,  பிரத்யேகமாக இந்த அடையாளத்துடன் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி ஆகும்.

இந்த அடையாளத்துடன் வெளியாகும் முதல் திரைப்படம் ‘சில்லுக் கருப்பட்டி’ என்பது குறிப்பிடத்தக்கது. “இத்திரைப்படத்தை மிகச் சரியான தேதியில் மிகப் பிரமாண்ட வெளியீடாக வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்…” என்கிறார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் நிர்வாகியான சக்திவேலன்.

SK 15

இயக்குநர் ஹலிதா சமீம் இது பற்றிப் பேசும்போது, “இப்போது நான் மிகப் பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறேன். நான் இயக்கியிருக்கும் ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தினை பார்த்த மாத்திரத்தில் சூர்யா சார்,  ஜோதிகா மேடம் இருவரும் மனதார எங்களது குழுவை பாராட்டினார்கள். மேலும், உடனடியாக இப்படத்தின் உரிமையை வாங்குவதாக அறிவித்தார்கள். இதைவிட மகிழ்ச்சி தரும் விசயம் எங்களுக்கு ஏதுமில்லை…” என்றார்.