சந்தானத்தின் நடிப்பில் அடுத்து வெளியாகும் ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படம்

சந்தானத்தின் நடிப்பில் அடுத்து வெளியாகும் ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படம்

பிரபல நடிகரான V.T.V.கணேஷின் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ’சக்க போடு போடு ராஜா’ திரைப்படம், மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில்  தயாராகியுள்ளது.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க… இவருடன் சம்பத் ராஜ், ரோபோ சங்கர், சஞ்சனா சிங், V.T.V. கணேஷ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி படத் தொகுப்பு செய்துள்ளார். நடிகர் சிம்பு என்னும் எஸ்.டி.ஆர். இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் G.L.சேதுராமன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

actor santhanam

படத்தில் கதாநாயகன் சந்தானம் அறிமுகமாகும் பாடல் காட்சியில் சமீபத்தில் படமாக்கபட்டது. இந்தப் பாடல் காட்சியில் முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி  ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

                            “கலக்கு மச்சா டவுளத்துள 

                             கால  வாரும் காலத்திலே 

                             கலங்க நா கோழையில்லே “

                             களத்திளே இறங்கி காளபோல 

                             ரைட்டு தாட்டு உள்ளத்திலே

                             வெச்சு இருக்கும் நல்ல புள்ள”

என்று துவங்கும் இந்தப் பாடலை ரோகேஷ் எழுதியிருக்கிறார். நடிகர் சிம்பு என்னும் STR  இசையமைத்திருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் அனிருத் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்.

இப்படத்தில் STR இசையில் யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர்  ஆகியோரும் பாடல்களைப் பாடியுள்ளனர் .

நவம்பர் 14-ம் தேதி  சத்யம் திரையரங்கில் இந்தப் படத்தின் இசை விழா நடைபெறவுள்ளது.