full screen background image

‘சாவி’ திரைப்படம் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது

‘சாவி’ திரைப்படம் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது

The Sparkland நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘சாவி’ திரைப்படம்.

மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் ‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் பிரகாஷ் சந்திரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக ‘அறம்’ படத்தில் நடித்து பெயர் பெற்றிருக்கும் சுனுலட்சுமி நடித்துள்ளார்.

மேலும் உதயபானு மகேஸ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுரேஷ் ராம், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், இசை – சதீஷ் தாயன்பன், கலை இயக்கம் – வீரசமர், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், நடனம் – விஜி சதீஷ், அபிநயஷ்ரி, தயாரிப்பு நிர்வாகம் – எம்.சிவக்குமார், மக்கள் தொடர்பு – நிகில், விளம்பர வடிவமைப்பு – சசி அண்ட் சசி, எழுத்து, இயக்கம் – ஆர்.சுப்ரமணியன்.

“இத்திரைப்படம் எதார்த்த சினிமா வரிசையில் இடம் பெறும்வகையில் கதை, திரைக்கதையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மதுரையில் வாழும் இளைஞன் ஒருவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களே ‘சாவி’ படத்தின் கதை. ‘சாவி’ உங்களின் இதயங்களையும் திறக்கக் கூடும்..” என்கிறார் இயக்குநர் ஆர்.சுப்ரமணியன்.  

வரும் ஜனவரி 5-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

Our Score