‘அம்மணி’ திரைப்படத்தை ‘எஸ்  பிச்சர்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது

‘அம்மணி’ திரைப்படத்தை ‘எஸ்  பிச்சர்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது

‘வாலம்பா’ என்னும் பாட்டியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அம்மணி’.

டேக்  என்டர்டைன்மெண்ட்’ சார்பில் வெண் கோவிந்தா தயாரித்துள்ள இந்த ‘அம்மணி’ திரைப்படம், வரும் அக்டோபர் 14-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சமீப நாட்களாகவே ‘அம்மணி’ படத்தினால் ஏற்பட்டு இருக்கும் எதிர்பார்ப்பானாது, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே போகிறது. வலுவான கதை களமும், சிறந்த கதையம்சமும், இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பும்தான் அதற்கு காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நிலையில், இந்த அம்மணி திரைப்படத்தின் விநியோக உரிமையை தரமான படங்களை தொடர்ந்து வழங்கி வரும்  ‘எஸ் பிச்சர்ஸ்’ நிறுவனம் வாங்கியிருப்பது மேலும் சிறப்பு. 

“இந்த ‘அம்மணி’ திரைப்படத்தை பற்றி விளக்கி கூற வார்த்தைகளே இல்லை. உன்னதமான உறவு என்றால் என்ன என்பதை அம்மணி திரைப்படத்தை பார்த்த பிறகு நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை உள்ள  எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளத்திலும் ‘அம்மணி’ திரைப்படம் பயணிக்கும். இத்தகைய வலிமையான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் ‘அம்மணி’ திரைப்படத்தின் விநியோக உரிமையை நாங்கள் வாங்கியிருப்பது, எங்களுக்கு  எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…” என்கிறார் ‘எஸ் பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனரான சீனு.
error: Content is protected !!