‘ருத்ரமாதேவி’ திரைப்படத்தின் டிரெயிலரை இசைஞானி இளையராஜா வெளியிட்டார்..!

‘ருத்ரமாதேவி’ திரைப்படத்தின் டிரெயிலரை இசைஞானி இளையராஜா வெளியிட்டார்..!

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் ‘ருத்ரமாதேவி’ திரைப்படத்தின் புதிய டிரெயிலரை இசைஞானி இளையராஜா நேற்று வெளியிட்டார்.

anuskha-2

தெலுங்கின் பிரபலமான இயக்குநரான குணசேகர் இயக்கியிருக்கும் இந்த ‘ருத்ரமாதேவி’ திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரான ருத்ரமாதேவி கேரக்டரில் அனுஷ்கா நடித்திருக்கிறார். மேலும் அல்லு அர்ஜூன், ராணா டக்குபதி, கிருஷ்ணம் ராஜு, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், கேத்தரின் தெரசா, ஹம்சா நந்தினி, பிரபா, அதிதி செங்கப்பா, சுமன், ஆதித்ய மேனன், வெண்ணிலா கிஷோர் என்று மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த வரலாற்று படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அஜயன்ன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கர் பிரசாத் எடிட்டிங் செய்திருக்கிறார். பா.விஜய் பாடல்களை எழுத இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். பரிச்சூரி பிரதர்ஸ் வசனங்களை எழுதியிருக்கிறார்கள். நீட்டா லூல்லா உடையலங்காரத்தை மேற்கொள்ள தோட்டா தரணி கலை இயக்கம் செய்திருக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டை பயிற்சியை செய்திருக்கிறார். எழுதி, தயாரித்து, இயக்கம் செய்திருக்கிறார் குணசேகரன்.

இப்படத்தின் டிரெயிலரை இசைஞானி இளையராஜா நேற்று மதியம் பிரசாத் ஸ்டூடியோவில் இருக்கும் தன்னுடைய ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் வெளியிட்டார்.

ruthramadevi-audio-4

இந்த எளிய விழாவில் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும், இயக்குநர் குணசேகரனும் கலந்து கொண்டனர். ருத்ரமாதேவியை தமிழகம் முழுவதிலும் மறைந்த தயாரிப்பாளர் இராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே வெளியிடவுள்ளது.




error: Content is protected !!